

கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் சரிவர விளையாடாவிட்டாலும் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், ஒரு சில வீரர்களுக்குத் தங்களது அறிமுக டெஸ்ட் ஆட்டமே கடைசி ஆட்டமாக அமைந்துள்ள சோகமான நிகழ்வுகளும் உண்டு.அதிலும் சில வீரர்கள் அத்தகையை தருணங்களில் சாதனை புரிந்துள்ளனர்.அவர்களில் சில வீரர்கள் பற்றியும் அந்த டெஸ்டுக்களின் சில முக்கிய நிகழ்வுகள் குறித்தும் இங்கு காண்போம்.
1. ஆப்ரே ஸ்மித் (C. Aubrey Smith) - இங்கிலாந்து (1889)
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட இங்கிலாந்து அணியின் கேப்டனாாக இருந்தவர் ஆப்ரேய் ஸ்மித்.
1889, மார்ச் 12-13 தேதிகளில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் (Matting Wicket-ல்) நடைபெற்ற இந்த ஆட்டம், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஆகும்.
இந்த டெஸ்ட் தான் இங்கிலாந்து அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் முதல் முதலில் விளையாடப் பட்ட டெஸ்ட் ஆட்டம் ஆகும்.
இந்த அறிமுக டெஸ்டில் இங்கிலாந்து அணி கேப்டன் ஆப்ரேய் ஸ்மித் மொத்தம் 7 விக்கெட்டுக்கள் எடுத்தார் (5/19 மற்றும் 2/42)
அது மட்டும் அல்லாது இவரது தலைமையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
ஸ்கோர் :
தென் ஆப்பிரிக்க அணி 84 மற்றும் 129 ரன்கள்
இங்கிலாந்து 148 மற்றும் 67 / 2
இருந்தும் இதுவே ஆப்ரேய் ஸ்மித் அவர்களின் முதலும் கடைசி டெஸ்ட்டும் ஆக அமைந்தது.கிரிக்கெட் தவிர இவர் நடிகராகவும் திகழ்ந்தார்.ஹாலிவுட் படங்களில் தோன்றியுள்ள இவர் புகழ் பெற்ற ஹாலிவூட் நடிகை எலிசெபத் டைலர் நடித்த படத்தில் நடித்துள்ளார்.அது மட்டும் அல்லாமல் அந்த ஹாலிவுட்டில் கிரிக்கெட் அறிமுகப்படுத்தி பல பிரபலங்களை கிரிக்கெட் ஆட்டம் விளையாட வைத்த பெருமையும் இவருக்கு உண்டு.
2. கோபோ ஆஷ்லே (Gobo Ashley) - தென் ஆப்பிரிக்கா (1889)
கேப் டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா சார்பில் அறிமுகமானார். முதலில் ஆடிய இங்கிலாந்து அணி எடுத்த ரன்கள் 292.அறிமுக தென் ஆப்பிரிக அணி வீரர் கோபோ அஷ்லே சிறப்பாக பந்துக்கள் வீசி 7 விக்கெட்டுக்கள் கைப் பற்றினார்.இதுவே இவரது அறிமுக முதல் தர ஆட்டமாகவும் திகழ்ந்தது.இருந்தும் அவருக்கு இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்ய வாய்ப்பே கிட்டவில்லை.
ஏனென்றால் தென் ஆப்பிரிக்க. அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் எடுத்த ரன்கள் 47 மற்றும் 43.
இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இந்த டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இரண்டு நாட்கள் மட்டுமே நடைப் பெற்றது. (25-26 மார்ச் 1889).
இங்கிலாந்து பவுலர்
ஜான்னி பிரைக்ஸ் எடுத்த விக்கெட்டுக்கள் 15 (7/17 மற்றும் 8/11).இந்த 15 விக்கெட்டுக்களில் 14 விக்கெட்டுக்களை க்ளீன் போல்ட் முறையில் அவுட் ஆக்கினார்.இங்கிலாந்து துவக்க வீரர் பாபி ஆபேல் 120 ரன்கள் எடுத்தார்.தென் ஆப்பிரிக்கதுவக்க வீரர் பெர்னார்ட் தான்கிரேட் கடைசி வரையில் ஆடி அவுட் ஆகாமல் காரிட் தி பேட் ( carried the bat ) சாதனை புரிந்தார். 26* ரன்கள்.
3. சார்லஸ் மாரியட் (Charles Marriott) - இங்கிலாந்து (1933)
1933 ஆகஸ்ட் மாதம் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் இவரது அறிமுக மற்றும் கடைசி ஆட்டமானது.இந்த டெஸ்டில் லெக் ஸ்பின் பவுலர் சார்லஸ் மாரியட் 11 மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
( 5 / 37 மற்றும் 6 / 59 )
312 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஸ்கோர்
100 மற்றும் 195.
இங்கிலாந்து வீரர் பிரெட் பேக்வெல் 107 ரன்கள்
மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர் மார்ட்டின்டலே 5 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
இந்த டெஸ்டில் விளையாடும்போது அவருக்கு வயது 37. சிறப்பான பங்களிப்பு இருந்தும், அதிக வயது காரணமாக அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
4. பட்டி ஓல்ட்ஃபீல்ட் (Paddy Oldfield) - இங்கிலாந்து (1939)
மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நடைப் பெற்றது ( 19 - 22 ஆகஸ்ட் 1939 )
இதில் அறிமுகம் ஆன 28 வயதான இங்கிலாந்து அணி வீரர் சிறப்பாக ஆடி 80 மற்றும் 19 ரன்கள் எடுத்தார்.இதுவே இவராது கடைசி டெஸ்ட் ஆட்டமாக முடிந்தது.இரண்டாம் உலக போர் வந்ததால் இவரால் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியவில்லை.இந்த டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.
ஸ்கோர் :
இங்கிலாந்து அணி
352 மற்றும் 366 / 3 டிக்ளர்.
இந்த டெஸ்டில்
லென் ஹட்டன் 73 மற்றும் 165, ஜோ ஹார்டஸ்டாப் 94, கேப்டன் வால்லி ஹம்மோன்ட் 138 ரன்கள் இங்கிலாந்து அணி சார்பாக எடுத்தனர்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர்கள்
ஜார்ஜ் ஹெடிலே 65, விக் ஸ்டோல்மெயர் 96,
பம் பம் வீக்ஸ் 137, பரோன் கான்ஸ்டாண்டின் 79
ரன்கள் குவித்தனர்.
பவுலிங்கில் பரோன் கான்ஸ்டாண்டின் மற்றும் இங்கிலாந்து வீரர் ரெஃ பெர்க்ஸ் தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இதே டெஸ்டில் அறிமுகம் ஆகி சிறப்பான பேட்டிங் ஆடிய மற்றும் ஒரு வீரருக்கும் இதுவே அவரது கடைசி டெஸ்ட் ஆகவும் அமைந்தது.
அவரைப் பற்றி அடுத்து காண்போம்.
5. விக் ஸ்டோல்மேயர் (Vic Stollmeyer) - மேற்கு இந்தியத் தீவுகள் (1939)
மேலே குறிப்பிட்ட அதே 1939 ஓவல் டெஸ்டில் அறிமுகமானவர் விக் ஸ்டோல்மேயர். இவரது சகோதரர் ஜெப்ரி ஸ்டோல்மேயரும் இதே போட்டியில் ஆடினார்.அறிமுக ஆட்டத்திலேயே 96 ரன்கள் குவித்து, வெறும் 4 ரன்களில் சதத்தைத் தவறவிட்டார்.அது மட்டும் அல்லாமல் மேலும் டெஸ்ட் ஆட்டங்கள் விளையாடி இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களையும் இழந்தார்.இரண்டாம் உலக போர் துவங்குவதற்கு முன்னால் நடைப் பெற்ற இந்த கடைசி டெஸ்ட் இதுவாகும்.
மேலும் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆகி சிறப்பாக ஆடியும் அதுவே அவர்களின் கடைசி டெஸ்ட் ஆன இரண்டு வீரர்கள் சேர்ந்து ஆடியது ஒரு அரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.
அவர்கள் தான் இங்கிலாந்து வீரர் பட்டி ஓல்ட் பீல்ட் மற்றும்மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர்விக் ஸ்டோல்மெயர்.
6. ஆண்டி காண்டேயுமே (Andy Ganteaume) - மேற்கு இந்தியத் தீவுகள் (1948)
1948-ல் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது சொந்த மண்ணில் (போர்ட் ஆஃப் ஸ்பெயின்) அறிமுகமானார்.இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில்லி கிரிஃபித் ( 140 ரன்கள்) மற்றும் மேற்கு இந்திய தீவுக்கள் அணி துவக்க வீரர் ஆண்டி காந்தேையுமே ( 112 ரன்கள் ) இருவரும் அறிமுக வீரர்கள் இந்த டெஸ்ட் ஆட்டத்தில்.
இது தொடரின் இரண்டாது டெஸ்ட் மேற்கு இந்திய தீவுக்களின் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைப் பெற்றது.
( 11 - 16 பிப்ரவரி 1948 ).இவர்களை தவிர சதங்கள் எடுத்த இரண்டு வீரர்கள்.மேற்கு இந்திய தீவுக்கள் அணி துவக்க வீரர் ஜார்ஜ் கரெவ் ( 107 ரன்கள் ) மற்றும் இங்கிலாந்து அணி துவக்க வீரர் ஜாக் ராபர்ட்சன் ( 133 ரன்கள் ).
இந்த டெஸ்டில் அறிமுகம் ஆன புகழ் பெற்ற வீரர் பிரேங்க் ஒர்றேல் அறிமுக டெஸ்டில் எடுத்த ரன்கள் 97.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி பவுலர் வில்ப் பெர்குசன் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ( 5 மற்றும் 6 )
டிராவில் முடிந்த டெஸ்டின் ஸ்கோர்
இங்கிலாந்து
362 மற்றும் 275 ரன்கள்
மேற்கு இந்திய தீவுக்கள்
497 மற்றும் 72 / 3
13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்த துவக்க வீரர் ஆண்டி காண்டேயுமே அந்த ரன்கள் எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாலும் வேறு சில காரணங்களுக்காகவும் அவரால் மேற் கொண்டு டெஸ்டுக்கள் விளையாட முடியவில்லை. ஆகவே இந்த டெஸ்ட் அவரது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் ஆக முடிந்தது.
7. ரோட்னி ரெட்மண்ட் (Rodney Redmond) - நியூசிலாந்து (1973)ரோட்னி ரெட்மோன்ட் - நியூ ஸியலாந்து வீரர்.
இந்த துவக்க வீரர் தனது அறிமுக டெஸ்டில் சதம் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் அறை சதம் வேறு.
107 மற்றும் 56 ரன்கள்.
( 20 மற்றும் 9 பவுண்டரிகள் )
இந்த நிகழ்வு நடைப் பெற்றது ஆக்லாண்டு மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் (16-19 பிப்ரவரி 1973)
மஜித் கான் 110 (பாகிஸ்தான்), பிரைன் ஹேஸ்டிங்ஸ் 110 (நியூ ஸியலாந்து) ரன்கள். பாகிஸ்தான் பவுலர் இன்டிகாப் ஆளம் 6 விக்கெடுக்கள்.
டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஸ்கோர்
பாகிஸ்தான்
402 மற்றும் 271
நியூசிலாந்து
402 மற்றும் 92 / 3
அறிமுக டெஸ்டில் அருமையாக விளையாடி சதம் எடுத்து இருந்த பொழிதிலும் இதுவே ரோட்னி ரெட்மோன்ட் அவர்களின் இறுதி டெஸ்டாக அமைந்தது. இவ்வளவு சிறப்பாகத் தொடங்கியும், அவர் அணிந்திருந்த 'காண்டாக்ட் லென்ஸ்' (Contact Lens) தொடர்பான பிரச்சினைகளால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு விளையாட முடியாமல் போனது.