3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்னு சொன்னார்கள் - யுவராஜ் சிங் உருக்கம்..!

yuvaraj singh
yuvaraj singh
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங், புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரு மாபெரும் போராளியாக அனைவராலும் பாராட்டப்படுகிறார். தனது பாதிப்பு குறித்து அவர் மீண்டும் நினைவுகூர்கையில், "3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பீர்கள் என மருத்துவர்கள் கூறினர். என்னுடைய நுரையீரல் மற்றும் இதயத்திற்கு இடையே இருந்த கட்டி, நரம்பு மண்டலத்தை அழுத்தியது. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் கிரிக்கெட் சாதனைகளில் மட்டுமல்ல, உலகின் கொடிய நோயாகக் கருதப்படும் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்றதன் மூலம், பலருக்கும் வாழும் உத்வேகம் தருவதிலும் லெஜண்ட் ஆகத் திகழ்கிறார்.

12 டிசம்பர் 1981ல் சண்டிகரில் பிறந்த இவர் ஆல்-ரவுண்டராக இந்திய கிரிக்கெட் அணிக்கு வலு சேர்த்தவர்.  (Left-hand bat) லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேனாகவும் Left-arm spin பவுலிங்கிலும் உலகின் கவனம் ஈர்த்தவர்.

1997: அண்டர்-19 உலகக்கோப்பையில் சிறந்த ஆட்டத்தை தந்து 2000 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடி 2007 T20 உலகக்கோப்பை சீரிஸில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து முதல் இந்திய வீரராக உலக சாதனை புரிந்தவர். 2011 ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில்  இந்தியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து Man of the Tournament விருதைப் பெற்றார்.

2011 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்து கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்ற முக்கிய வீரர் எனும் புகழைப் பெற்ற யுவராஜ் சிங்
அந்த போட்டிகளின் போது  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மூச்சுத் திணறல், கடுமையான இருமல், சோர்வு ஆகியவை ஏற்பட்டதால் நடத்திய பரிசோதனைகளில் அவருக்கு Mediastinal Germ Cell Tumor எனப்படும் அரிதான வகை புற்றுநோய் (நுரையீரல் அருகே உருவாகும் கட்டி) இருப்பது (2011 இறுதியில்) கண்டறியப்பட்டது.


2012-ஆம் ஆண்டு, அவர்  சிகிச்சைக்காக அமெரிக்கா (Boston & Indianapolis) சென்றார். அங்கு அவருக்கு மொத்தம் 3 சுற்று கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்படி நடந்த சிகிச்சை காலத்தில் அவருக்கு முடி உதிர்வு ,உடல் எடை குறைவு போன்ற பல உபாதைகளுடன் தனது உயிரான கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையுமோ என்ற பயத்தில்
கடுமையான மன அழுத்தமும் ஏற்பட்டது.ஆனால் மனதில் உறுதியுடன் யுவராஜ் பல கட்ட சிகிச்சைக்கு பின் 2012-இல் புற்றுநோயை முழுமையாக வென்று 2013-ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணிக்குத் மீண்டும் திரும்பினார்.
புற்றுநோய் போராட்டத்திற்குப் பின் இவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாடியதே ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் அனுபவத்தை மற்றவர்களுக்கு உதவியாக மாற்ற YOUWE CAN  (“YouWeCan” Foundation) என்ற அமைப்பை தொடங்கினார். புற்றுநோய் விழிப்புணர்வு, சிகிச்சை உதவி, மன உறுதி அளித்தல் ஆகிய பணிகளில்  தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார்.

“உடல் நோய் உங்களை உடைக்கலாம்; ஆனால் மன உறுதியை உடைக்க முடியாது.” என்பதே யுவராஜ் சிங்கின் வாழ்க்கை சொல்லும் பாடம். நம்பிக்கையுடன் தனது வலியிலும் நோயை எதிர்த்து விடாமுயற்சியுடன்
போராட்டம் நடத்திய யுவராஜ் சிங் இன்று புற்றுநோய் வெற்றியாளராகவும் (Cancer Survivor), கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பானிபூரி விற்ற சிறுவன் இன்று உலகமே வியக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்!
yuvaraj singh

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com