
நம் நாட்டில், செஸ் விளையாட்டு இப்போது பிரபலமடைந்து வருகிறது. நாம் வெப்ப மண்டலத்தில் வசிப்பதால், 'இன்டோர் கேம்ஸ்' என்றழைக்கப்படும் செஸ் போன்ற விளையாட்டுகளை அதிகம் விரும்புவதில்லை. மைதானத்தில் ஓடியாடி விளையாடும் கால்பந்து, கபடி, கில்லி, போன்றவற்றிலேயே நமது இளைஞர்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மேலை நாடுகளில் செஸ் அதிகப் பிரசித்தம். அதற்கு அங்குள்ள சீதோஷ்ணமும் முக்கியக் காரணம்.
மேலை நாட்டவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பதோடு, எவற்றிலெல்லாம் புதுமையைப் புகுத்தலாமோ, அவற்றிலெல்லாம் அதனைப் புகுத்தி அழகு பார்ப்பதோடு, அனுபவிக்கவும் செய்வார்கள். அந்த விதத்தில் இன்டோர் கேமான செஸ்ஸை அவுட்டோர் கேமாக்கி, அனைவரும் பார்த்து ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறார்கள். எங்கு என்றுதானே கேட்கிறீர்கள்?
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான இன்ஸ்ப்ரூக்கில், நகருக்குள் அமைந்துள்ள பூங்கா ஒன்றில், செஸ் கட்டங்களைப் பூமியில் அமைத்து, ராஜா, ராணி, பிஷப், எலிபென்ட், ஹார்ஸ், சோல்ஜர் காய்களை, விளையாடுபவர்கள் நின்று கொண்டே நகர்த்துவதும், சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து ஆட்டத்தை ரசிப்பதும், அனைவரையும் கவரும் ஒன்றாகும்! நாங்கள் பார்த்து ரசித்தோம்! நீங்களும் கண்டு களியுங்களேன்!
ப்ரவுன் ஸ்வட்டர் போட்டவர் எதிரணிக் காயை வெட்டச் செல்கிறார்! ப்ளூ ஷர்ட் அணிந்த எதிரணிக்காரர் அடுத்த மூவுக்காக யோசித்துக் கொண்டிருக்கிறார்!சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்!