பாகிஸ்தான் அணி இந்தியாவை அசால்டாக வென்றுவிடும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் சீண்டல்!

Pakistan Former cricketer
Pakistan Former cricketer
Published on

இந்தியா அதன் சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடியது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 92 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் சொந்த மண்ணிலேயே இந்திய அணி இதுபோல தொடரை இழந்திருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. 

ஆனால், இப்போது ஒரு போட்டியில்கூட வெற்றிபெறாமல் தொடரை இழந்திருக்கிறது. இதனால் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனைவரும் இந்த தோல்விக்கு எது காரணம் யார் காரணம் என்று தங்களுக்கு தோன்றுவதையெல்லாம் சொல்கிறார்கள். எது எப்படியோ மூன்று டெஸ்ட் போட்டிகளும் தோல்வியில் முடிந்துவிட்டதால், அடுத்தடுத்த போட்டிகளில் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையேதான் பிசிசிஐயும் யோசிக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா செல்லவிருக்கும் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டிக்கூட வெற்றிபெறாமல் தவித்து வந்தது, ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்து இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கே.எல்.ராகுலை கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்!
Pakistan Former cricketer

அந்தவகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதாவது, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அது மிகப் பெரியதாக இருக்கும். கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்ட இரண்டு அணிகளுக்கும் அது நன்மையை அளிக்கும். பாகிஸ்தான் இந்திய அணியை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சுகளில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை அவர்கள் மண்ணிலேயே 3 - 0 என வீழ்த்தி இருக்கிறார்கள்.” என்று பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com