இந்தியா பாகிஸ்தான் இடையே சமீபக்காலமாக சுமுகமான உறவு என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பைசரன் பள்ளத்தாக்கு அருகே 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் இடத்தில் நடந்தது.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை. சிலர் பாகிஸ்தான் மக்களையே வஞ்சிக்கிறார்கள். மேலும் சிலர் மதவாத பிரச்சனையாக சொல்லி வாதாடுகிறார்கள். சமூக வலைதளங்களில் இதுகுறித்தான பல தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைப்பது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
அதேபோல், பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பக்கங்கள், பாகிஸ்தான் யூட்யூபர்ஸ் பக்கங்கள் ஆகியவையும் இந்திய அரசால் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் படம் மே 9 அன்று இந்தியாவில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்துகளைப் பரப்புவதாகச் சொல்லி டான் நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை விதித்தது.
இந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன. பாபர் ஆஸம், ஷஹீன் அஃப்ரிடி, ஷதாப் கான், முஹமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களுடைய கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய இன்ஸ்டகராம் கணக்குகளை திறந்து பார்த்தால் முடக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.
இதனால் இந்திய பாகிஸ்தான் உறவு ஆழமாக பாதிக்கப்படுகிறது என்றே கூறலாம். இந்த நிலை எப்போதும் மாறும் என்றே தெரியவில்லை. மாறுமா என்பதும் சந்தேகம்தான்.