

2026 ஆம் ஆண்டிற்கான பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் உள்ள ஐச்சி-நகோயா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அக்டோபர் 23 ஆம் தேதி முடிவில், இந்தியக் குழுவினர் பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை பெற்று 4 ஆம் இடத்திற்கு முன்னேறினர்.
இதுவரை இந்திய குழுவினர் பெற்ற பதக்கங்களின் பட்டியல் பின்வருமாறு
தங்கம் - 30
வெள்ளி - 35
வெண்கலம் - 49 என மொத்தமாக 114 பதக்கங்களை பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் உஸ்பெகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பாரா தடகளம் - தங்கம் 4, வெள்ளி 3, வெண்கலம் 4
1.ஆடவர் ஈட்டி எறிதல் F42-F44/F61-F64 பிரிவில் மொத்தமாக அனைத்து பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது. சுமித் அன்டில் தங்கம், மகேந்திர குர்ஜார் வெள்ளி மற்றும் சந்தீப் சர்கார் வெண்கலம் வென்றனர்.
2.ஆடவர் 400 மீட்டர் T64 பிரிவில் சந்தீப் தங்கம் வென்றார் , அஜய் குமார் வெண்கலம் வென்றார்.
3.100 மீட்டர் T64 இறுதிப் போட்டியிலும் சந்தீப் வெண்கலப் பதக்கம் வென்றார்.
4. ஆடவர் கிளப் த்ரோ F51 போட்டியில், பிரணவ் சூர்மா தங்கப் பதக்கம் வென்றார்.
5.ஆடவர் F37 ஈட்டி எறிதல் பிரிவில், ஹேனி தங்கப் பதக்கம் வென்றார்.
6. ஆடவர் 1500 மீட்டர் T46 பிரிவில் பர்மோத் பிஜார்னியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
7. மகளிர் நீளம் தாண்டுதல் T47 பிரிவில் நிமிஷா சுரேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
8. ஆடவர் ஈட்டி எறிதல் F40/F41 இறுதிப் போட்டியில் நவதிப் வெண்கலம் வென்றார்.
9. ஆடவர் 200 மீட்டர் T37 போட்டியில் இன்றும் ராகேஷ்பாய் பட் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
பாரா வில்வித்தை - தங்கம் 1 , வெள்ளி 1
1. ரிகர்வ் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை வீழ்த்தி ஹர்விந்தர் சிங் மற்றும் விஜய் சுண்டி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர்.
2. ரிகர்வ் மகளிர் இரட்டையர் பிரிவின் பூஜா ஜாத்யான் மற்றும் பவ்னா சௌத்ரி ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
பாரா பேட்மிண்டன் - தங்கம் 3 , வெள்ளி 4
1. ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார் , பிரமோத் பகத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2. ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் நவீன் சிவகுமார் தங்கம் வென்றார்.
3.மகளிர் இரட்டையர் SL3-SU5 பிரிவில் மானசி ஜோஷி - துளசிமதி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர்.
4. மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
5.மகளிர் ஒற்றையர் SH6 பிரிவில் நித்யா ஸ்ரீ சுமதி சிவன்
வெள்ளிப் பதக்கம் வென்றார்.
6. கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன், வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
பாரா விளையாட்டு சுடுதல் - தங்கம் 1
1.மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் SH1 பிரிவில் மோனா அகர்வால் 357.1 என்ற உலக சாதனை செய்து தங்கப் பதக்கம் வென்றார்.
பாரா டேபிள் டென்னிஸ் - வெண்கலம் 1
1.ஆடவர் இரட்டையர் பிரிவு MD4-ல்,ஜெஹான் மதன் மற்றும் ஷுபம் வத்வா ஜோடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.
பாரா நீச்சல் - வெண்கலம் 1
1.ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்11 பிரிவில் ஹிமான்ஷு நந்தல், வெண்கலப் பதக்கம் வென்றார்.