PBKS Vs GT: மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி… !

PBKS Vs GT
PBKS Vs GT
Published on

IPL தொடரின் 37வது லீக் போட்டியில், நேற்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  பொதுவாக ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், அவர்களும் இந்தமுறை சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியாறினார்கள்.

குஜராத் அணியின் பவுலர் சாய் கிஷோர்  4 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்து, சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியின் இலக்கை குறைத்தார். அதேபோல், மோஹித் ஷர்மாவும்  4 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை எடுத்து, எதிரணிக்கு 143 ரன்களை இலக்காக வைத்தது.

குஜராத் அணியில் களமிறங்கிய சஹா 11 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதேபோல், சுப்மன் கில்லும் 29 பந்துகளில் 35 ரன்களுடன் வெளியேறினார். சாய் சுதர்சன் 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். குஜராத் அணியைப் பொறுத்தவரை ராகுல் திவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் விளையாடினார். அணி அதன் இலக்கை அடைய இது மிகப்பெரிய உதவியாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
“ப்ளீஸ் அவரை மறந்துடாதீங்க…” – பிசிசிஐ தேர்வுக் குழுவுக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை!
PBKS Vs GT

ஷாருக் கான் 8 ரன்களும், ரஷித் கான் 3 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதனால் குஜராத் அணி 19.1 ஓவர்களிலேயே 146 ரன்கள் எடுத்து, இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. பஞ்சாப் அணியின் பவுலர்களும் சிறப்பாகவே விளையாடினார்கள். ஹர்ஷல் பட்டேல் 3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசினார். லியம் லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை எடுத்து அணியை வெற்றிபெற வைக்க முயற்சித்தார்.

அந்தவகையில், குஜராத் அணி 8 போட்டிகள் விளையாடி, 4 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதேபோல், பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 2 போட்டிகள் வென்று 9வது இடத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com