PBKS vs GT: “பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்!” – கேப்டன் தவான்

PBKS
PBKS
Published on

நேற்று பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இறுதிவரை யார் வெற்றிபெறுவார் என்று கணிக்கமுடியாத அளவிற்கு விறுவிறுப்பாக சென்றது. ஆனாலும் இறுதியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் என்று வெற்றிக்கான காரணத்தைக் கூறியிருக்கிறார் தவான்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்து கடினமான இலக்கையே எதிரணிக்கு வழங்கியது. அணியின் கேப்டன் கில் 48 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

அடுத்ததாக பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இந்த அணியில் கடைசி வரை மைதானத்தில் நின்று வெற்றியை தேடித் தந்தவர்தான் ஷஷாங்க் சிங். இவர் 25 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார். அதேபோல் 29 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி என மொத்த 61 ரன்களை சேர்த்தார். கடைசியில் பஞ்சாப் அணி வெற்றிபெறப் போகிறது என்கிற சமயத்தில்தான் சரியாக கடைசி ஓவரில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை எடுத்தது. இதனால் யார் வெற்றிபெறுவார்கள் என்று கடைசி வரை ஒரு ட்விஸ்ட் இருந்துக்கொண்டுதான் இருந்தது.

இருப்பினும் பஞ்சாப் அணியில் கடைசியாக களமிறங்கிய ப்ரார் சிறிது நேரமாக இருந்தாலும் வலுவாக நின்றதால் ஷஷாங்கிற்கு இது சாதகமாக அமைந்தது. இந்தத் த்ரில்லர் போட்டியானது இறுதியாக பஞ்சாப் அணியின் வெற்றியில் முடிந்தது.

இந்த வெற்றிகுறித்து அணியின் கேப்டன் தவான் பேசுகையில்,” இது ஒரு அற்புதமான விளையாட்டாகும். கடைசி வரை த்ரில்லர் போட்டியாகவே அமைந்தது. பஞ்சாப் வீரர்கள் வெற்றியை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. 200 இலக்கு என்றவுடனே தொடக்கவீரர்கள் அதிரடியாக ஆட வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். ஆனால் நான் முதலிலேயே அவுட் ஆகிவிட்டேன். ஆனாலும் பவர் ப்ளே முடிவில் 60 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஷஷாங்க் சிங் களமிறங்கிய சில பந்துகளிலேயே சிக்ஸர்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
KKR vs DC: “ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து!
PBKS

அது மிகவும் பாராட்டிற்குறியது. இவர் ஐபிஎல் போட்டியில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இப்போது பாசிட்டிவ் மனநிலையுடன் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல் இளம் வீரர் அஷுதோஷ் சர்மா பிரஷரான சூழில் சிறப்பாக விளையாடி ஒரு இம்பேக்ட் வீரராக செயல்பட்டார். இவர்கள் இருவரால்தான் இன்று பஞ்சாப் அணி வெற்றியை பெற்றது. “ இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், “ நாங்கள் கடினமான இலக்கையே கொடுத்தோம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இந்த மைதானத்தில் முக்கியமான கேட்ச்களை விட்டாலே எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் எதிரணிக்கு சாதகமாகத்தான் இருக்கும். நாங்கள் இன்னும் பல வழிகளில் முன்னேற வேண்டியுள்ளது. “ என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com