இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

modi wished team india
modi wished team india Source:dailythanthi
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதின.இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 257 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 96ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சாம்பியன்கள்!

ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

இந்த அபார வெற்றி, வீரர்களின் அசாத்திய திறமை, மன உறுதி மற்றும் கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகும். இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் மிகச்சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிறைவு செய்துள்ளது.

மிகவும் நன்று, டீம் இந்தியா!

logo
Kalki Online
kalkionline.com