சப்னா கில் விவகாரத்தில் Prithvi Shaw ஓப்பன் டாக்!

Prithvi Shaw and Sabna gill.
Prithvi Shaw and Sabna gill.Imge credit: Sportskeeda

பிரபல யூட்யூபர் சப்னா கில், சென்ற ஆண்டு தன்னைத் தாக்கிய போது உயிரையே இழந்துவிட கூடுமோ என்ற அளவுக்கு பயம் ஏற்பட்டதைப் பற்றி விளக்கிக் கூறினார் பிரித்வி ஷா.

இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் காயம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை எந்த போட்டிகளிலுமே விளையாடவில்லை. அவ்வப்போது பயிற்சியில் இருந்து வந்தாலும் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இன்னும் அவர் குணமாகவில்லை. மேலும் அவர் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரித்வி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யூட்யூபர் சப்னா கில்லுடன் மோதலில் ஈடுப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். சப்னா கில்லையும் அவருடைய நண்பர்களையும் பிரித்வி பேட் வைத்து தாக்கியதாக சப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இரு போலிஸார்கள் மேலும் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து சப்னா கில் கூறிய அனைத்துமே பொய் என்பது விசாரனையின் மூலம் தெரியவந்தது. மேலும் சப்னா கில் தான் பிரித்வியைத் தாக்கியிருக்கிறார் என்றும் தெரியவந்ததால் போலிஸார் சப்னாவை கைது செய்தார்கள். பின் 15 நாட்களுக்குப் பின் சப்னா பெயில் மூலம் வெளிவந்தார். இப்போது பிரித்வி ஷா அந்த சம்பவத்தைப் பற்றி முழு விளக்கம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
"எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது". மெளனம் கலைத்த ரோகித் சர்மா!
Prithvi Shaw and Sabna gill.

பிரித்வி ஷா மும்பையில் உள்ள சஹாரா தனியார் ஹோட்டலில் உள்ள பெரல் கிளப்பிற்கு தனது நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது ஐந்து பேர் அவரிடம் செல்பி எடுத்துக்கொள்ள அவரை நோக்கி வந்தனர். செல்பி எடுத்து சென்றுவிட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு போட்டோ எதுவும் நன்றாக இல்லை என்று கூறி மீண்டும் செல்பி எடுக்கலாம் என்று பிரித்வியிடம் அதட்டலாக கேட்டிருக்கிறார்கள்.

இரண்டாவது முறையும் செல்பி எடுத்தப்பிறகு மீண்டும் பிரித்வியிடம் சென்று அவரின் அனுமதியில்லாமல் தோலில் கைப்போட்டு வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் சப்னா கில்லும் ஒருவர். பிரித்வி ஷாவின் மேனேஜர் அதிகமுறை அவர்களை ஹோட்டலில் இருந்து வெளியேறும்படி கூறியும் அவர்கள் கேட்காததால் பிரித்வி ஷா அங்கிருந்து கிளம்பினார்.

அவர் வெளியில் சென்று காரில் உட்கார்ந்தபோது சப்னா கில் கையில் பேட்டுடன் வந்து கார் கண்ணாடியை உடைத்திருக்கிறார். அதைத் தடுப்பதற்காக ஷா அந்த பேட்டை பிடிங்கி வைத்துக்கொண்டு தனது BMW காரை அங்கயே வைத்துவிட்டு நண்பரின் காரில் சென்றருக்கிறார்.

அப்போது அவர்கள் தன் உயிரையே எடுத்துக்கொள்வார்களோ என்ற அளவுக்கு உயிர் பயம் கொண்டதாக கூறினார். தனது வாழ்க்கையிலேயே இந்த சம்பவத்தில்தான் முதன்முறையாக அவ்வளவு பயம் கொண்டதாக கூறினார் பிரித்வி ஷா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com