5 வது டெஸ்ட் போட்டில் பவுலர்ஸ் லைனப்பில் சிக்கல்.. BCCI யாரைத் தேர்ந்தெடுக்கும்?

Jasprit Bumrah
Jasprit Bumrah

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 5 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ம் தேதி தரம்சாலாவில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணியிலிருந்து சிராஜ், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது அணியில் சிக்கலாக அமைந்துள்ளது.

என்னதான் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றினாலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டியும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதே. ஏனெனில் உலக டெஸ்ட் சேம்பியன்ஷீப்பின் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் இந்திய அணி கடைசிப் போட்டியில் வெற்றிபெறுவது முக்கியம். இதனால்தான் ரோகித் ஷர்மா இந்த 5 வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெறும் என்று பேட்டியில் கூறினார். அதேபோல் வெளிநாட்டில் விளையாடும் போது நாம் தோல்வியடைந்தால் கூட இங்கு நாம் வெற்றிபெறும் ஒவ்வொரு டெஸ்ட்டும் நம்மைக் காப்பாற்றும்.

அந்தவகையில் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. இப்போது இந்திய அணி தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்குப்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் நெருங்கிவருவதால் பும்ரா ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

ரோகித் ஷர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியை மிகவும் சீரியஸாக நினைப்பதால் பிசிசிஐ-யிடம் பும்ரா அணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார். நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து மார்ச் 2 வரை பும்ராவிற்கு  நீண்ட நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இதுவே அவருக்குப் போதுமானதாக இருக்கும் என்பதால், அவர் அணிக்குத் திரும்ப வாப்புள்ளது என்றே நம்பப்படுகிறது. வரும் மார்ச் 3ம் தேதி முதல் தரம்சாலாவில் பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து அந்த பயிற்சியில் பும்ரா கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நியூசிலாந்தைச் சேர்ந்த பவுன்சர் கிங் நெய்ல் வாக்னர் ஓய்வு அறிவிப்பு!
Jasprit Bumrah

சிராஜைப் பொறுத்தவரை  ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தாலும் கடைசி இன்னிங்ஸில் மூன்று ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்ததால் அவர் ஐந்தாவது போட்டியில் இடம்பெறுவது சந்தேகம்தான். இருப்பினும் சிராஜ் எப்போது வேண்டுமென்றாலும் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஆகாஷ் தீப் சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகள் எடுத்தாலும் அவரும் அதிக ரன்களைக் கொடுத்தார். இந்தநிலையில் மூவரில் எந்த இரண்டு பேர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப்பே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com