

வெற்றி நம் கையில் இருப்பதாக நினைக்கும் நேரத்தில்கூட ஆட்டத்தின் போக்கு மாறிவிடலாம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மன உறுதியைக் கைவிடாமல் போராடுவது ஒரு சிறந்த விளையாட்டு வீரரின் அடையாளம். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து!
பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் தாய்லாந்து வீராங்கனை சுபனிதா கேடேதோங்கை எதிர்கொண்டார். அக்டோபர் 21 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், சிந்து 21–14, 8–21, 23–21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து 21–14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் சுபனிதா அதிரடியாக விளையாடி 21–8 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார். இதனால் மூன்றாவது செட் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக மாறியது.
மூன்றாவது செட்டில் சிந்து 19–8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் இரண்டு புள்ளிகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இருந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுபனிதா தொடர்ந்து 11 புள்ளிகளைப் பெற்று 19–19 என ஆட்டத்தைச் சமன் செய்தார். வெற்றி நிச்சயம் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்குப் பதற்றம் அதிகரித்தது.
ஆனால், சிந்து தன்னுடைய அனுபவத்தையும் நிதானத்தையும் பயன்படுத்தி மீண்டும் போராடினார். முக்கியமான தருணங்களில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதியில் 23–21 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்றார். சுமார் 64 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டி, அவருடைய மன உறுதியையும் போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தியது.
வெற்றிக்குப் பிறகு, சில போட்டிகளில் எப்படியாவது வெற்றியைப் பெற வேண்டியிருக்கும் என்ற கருத்தைச் சிந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார். தனது ஆட்டத்தில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அடுத்த சுற்றில் ஜப்பானின் ரிக்கோ குன்ஜியைச் சிந்து எதிர்கொள்ள உள்ளார். இந்தப் போட்டி அவருடைய திறமையை மேலும் சோதிக்கும் ஒன்றாக இருக்கும்.
இளம் பேட்மிண்டன் வீரர்களுக்கு இந்த ஆட்டம் ஒரு நல்ல பாடமாக அமையும்.. பயிற்சியின் போது வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்வது, தோல்வியை ஏற்றுக் கொண்டு தவறுகளைத் திருத்துவது, கடினமான நேரங்களில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பேன்றவை போட்டிகளில் உதவும்..
உடல் திறனுடன் மனப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் .சிந்துவின் வெற்றி இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது..அதே வேளையில் அடுத்த சுற்றுகளில் இது போன்ற கடைசி நேரப் பதற்றத்தை தவிர்த்து ஆட்டத்தின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதும் அவருக்கு உதவியாக இருக்கும்..
வெற்றியில் இருந்து கற்றுக் கொள்வதுடன் மேம்படுத்த வேண்டிய அம்சங்களையும் அடையாளம் காண்பதே ஒரு சிறந்த வீராங்கனையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்.. இந்த போட்டி மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நினைவூட்டுகிறது..
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் ஒரு சில புள்ளிகளில் கூட தீர்மானிக்கப் படலாம்.. எனவே ஒவ்வொரு புள்ளியையும் முழுக் கவனத்துடன் அணுகுவது அவசியம்..எதிரணி தொடர்ந்து புள்ளிகளைப் பெற்றாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் மீண்டும் போராட வேண்டும்.. சிந்துவின் அனுபவம், விடாமுயற்சி,கடைசிவரை போராடும் குணம் ஆகியவை அவருக்கு பலமாகத் திகழ்கின்றன..
இந்த போட்டியில் பெற்ற வெற்றியை தன்னம்பிக்கயாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி பட்டத்தை வெல்லும் வாய்ப்பை அவர் உருவாக்குவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்..
இந்தியாவின் இளம் வீராங்கனைகளுக்கும் சிந்துவின் போராட்டம் ஊக்கமளிக்கும்.. விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் கடினமான தருணங்களையும் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றலாம்.. சிந்துவின் ஒவ்வொரு போட்டியும் அவருடைய அனுபவத்தை மேலும் செம்மைப்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது.. சர்வதேசப் போட்டிகளில் உலகின் முன்னணி வீராங்கனைகளை எதிர் கொள்வதன் மூலம் புதிய உத்திகளைக் கற்றுக் கொள்ள முடியும்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைதியாக விளையாடுவதும் முக்கியம்.. பிரெஞ்சு ஓபனில் சிந்து தொடர்ந்து முன்னேறி தனது திறமையை மீண்டும் நிரூபிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..
வெற்றி பெறுவது மட்டுமல்ல; வெற்றி கைநழுவும் சூழ்நிலையிலும் மனம் தளராமல் மீண்டு வருவதுதான் உண்மையான சாதனை. சிந்துவின் இந்த வெற்றி, விளையாட்டில் திறமையுடன் மன உறுதியும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. அடுத்த சுற்றிலும் அவர் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கட்டும்!