
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் உலக சாம்பியனான பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 22-ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போசிடெக்ஸ் டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குனரான ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
பிவி சிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள சையத் மோடி இன்டர்நேஷனலில் வெற்றியைத் தேடிய பேட்மிண்டன் வீராங்களை ஆனார். இவர் திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், தங்களது இரு குடும்பங்களும் ஒருவரையொருவர் அறிந்திருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டதாகவும் சிந்துவின் தந்தை பி.வி. ரமணா PTI யிடம் தெரிவித்தார்.
வரும் ஜனவரி முதல் போட்டிகளில் பிசியாக இருக்கபோவதால் இதுவே சரியான நேரம் என்று அவர் கூறினார். எனவே, இரு வீட்டாரும், டிசம்பர் 22-ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி, டிசம்பர் 24-ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், டிசம்பர் 20-ம் தேதி திருமணம் தொடர்பான விழாக்கள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
வெங்கட தத்தா சாய் தற்போது போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். வெங்கட தத்தா சாய் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், ஆப்பிள் அசெட் மேனேஜ்மென்ட்டில் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வருகிறார். அதே நேரத்தில் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் தவிர, 2019 ஆம் ஆண்டு தங்கம் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக சிந்து கருதப்படுகிறார்.
முன்னதாக, சனிக்கிழமை லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் 2024 பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
பேட்மிண்டன் தரவரிசையில் 18வது இடத்தில் உள்ள பிவி சிந்து, BWF சூப்பர் 300 போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 21-12, 21-9 என்ற செட் கணக்கில் 17 வயது சகநாட்டவரான உன்னதி ஹூடாவை தோற்கடித்தார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 119-வது இடத்தில் உள்ள சீன மக்கள் குடியரசின் வு லுயோ யுவை எதிர்கொள்கிறார்