Rahul Dravid
Rahul Dravid

ஐபிஎல் தொடரில் இந்த அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக தேர்வு!

Published on

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிட் சில காலங்களுக்கு முன் ஓய்வுபெற்றார். அந்தவகையில் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆவார். ராகுல் ட்ராவிட் சென்ற ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரே ஓய்வுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ அவருடைய பதவிக்காலத்தை இந்தாண்டு உலகக்கோப்பை தொடர் வரை நீடித்தது. இவரின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைந்தது. ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் ட்ராவிட் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 2021-ல் பொறுப்பேற்றார்.

இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்றிருக்காவிட்டாலும் ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2022, டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றது இந்திய அணி. ட்ராவிடின் பயிற்சியில் 2023, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரன்னர், 2023, உலகக் கோப்பையிலும் ரன்னர் என அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடிய விதம் அனைவரையும் பெரிதும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிட்சில் குளறுபடி செய்ததும், கடும் அரசியல் நெருக்கடியினாலும் இந்திய அணி தோற்றது. அந்தவகையில், டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் முடிவடைந்தது.

அணியை நன்றாக வழிநடத்துவதிலும், அணி வீரர்களின் மனதைப் புரிந்துக்கொண்டு அவர்களை வழிநடத்துவதிலும் சிறந்து விளங்கிய ட்ராவிட், இனி பயிற்சியாளராக வரமாட்டார் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த ஓய்வுக்காலத்தில் தனது குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிட்டு வந்த ட்ராவிடின் அடுத்த திட்டம் என்னவென்பது தெரியவில்லை. அவரது மகன் ஒருவர் U19 பிரிவில் இடம்பிடித்தார்.

இதையும் படியுங்கள்:
“இந்த ரன்கள் கூட எடுக்கவில்லை என்றால் உனக்குத்தான் அவமானம்” – கோலியிடம் ஹர்பஜன் கூறிய அந்த வார்த்தைகள்!
Rahul Dravid

இதற்கிடையேதான் ஐபிஎல் தொடரில் அவரை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய மும்பை, டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 அணிகளும் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மீண்டும் ஒரு பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் களமிறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com