“இந்த ரன்கள் கூட எடுக்கவில்லை என்றால் உனக்குத்தான் அவமானம்” – கோலியிடம் ஹர்பஜன் கூறிய அந்த வார்த்தைகள்!

Virat Kohli and Harbhajan singh
Virat Kohli and Harbhajan singh
Published on

கோலி சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய புதிதில் அவ்வப்போது ஹர்பஜன் சிங்கிடம் வந்து 'நான் எப்படி விளையாடுகிறேன்' என்று கேட்பாராம். அதற்கு ஒருமுறை ஹர்பஜன் சிங் 'நீ இந்த ரன் கூட அடிக்கவில்லை என்றால் உனக்கு மிகவும் அவமானமாகிவிடும்' என்று கூறியிருக்கிறார். இதுகுறித்த தகவலை விரிவாகப் பார்ப்போம்.

இப்போது விராட் கோலி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்தாலும், அறிமுகமான சமயத்தில் அவரும் தடுமாறியிருக்கிறார்.

2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, வந்த புதிதில் 20 ரன்கள் 30 ரன்கள் என்றுதான் அடித்துக்கொண்டிருந்தார். அறிமுகமான ஐந்தாவது போட்டியில்தான் அரைசதமே எடுத்தார். இந்த போட்டிக் குறித்து ஹர்பஜன் சிங் கூறியதைப் பார்ப்போம்.

“ எனக்கு இன்றும் அந்தப் போட்டி நன்றாக ஞாபகம் உள்ளது. விரேந்திர சேவாக் காயம் அடைந்திருந்தார். அப்போது அஜந்தா மெண்டிஸ் எல்லோரையும் விரைவாக வீழ்த்தி அவுட் ஆக்கி வந்தார். இளம் வீரராக இருந்த விராட் கோலி களத்தில் இறங்கி அரை சதம் அடித்து அவுட்டாகி வெளியே வந்தார். அப்போது விராட் என்னிடம் வந்து ‘எப்படி விளையாடினேன்’ என்று கேட்டார். அதற்கு நான் ‘நன்றாக விளையாடினாய்’ என்று சொன்னேன். மீண்டும் விராட், ‘ மென்டிஸ்-ஐ இன்னும் அடித்து ஆடிருக்க வேண்டும்’ என்று கூறினார். அப்போது அந்த ஆக்ரோஷத்தை நான் அப்படி விரும்பினேன்.

விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி சொல்ல வேண்டும். அப்போது நாங்கள் வெஸ்ட் இண்டீஸில் இருந்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஃபிடல் எட்வர்ட்ஸ் விராட் கோலியை அச்சுறுத்தி வந்தார். அவரை எல்பிடபுள்யூ ஆகவோ அல்லது ஷார்ட் பந்துகளை வீசியோ பேட்ஸ் மேன்களை வீழ்த்தி வந்தார். கோலி மீண்டும், மீண்டும் அவரிடம் அவுட்டாகி கொண்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்:
'பௌலர்களின் ரோல்ஸ் ராய்ஸ்' - பாராட்டும் தென்னாப்பிரிக்க வீரர்!
Virat Kohli and Harbhajan singh

அப்போது கோலி மிகவும் ஏமாற்றம் அடைந்து, தன் மீதே சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்து ‘ நான் நன்றாக ஆடுகிறேனா?’ என்று கேட்டார். 'நீ பத்தாயிரம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் உனக்கே அவமானமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் அடிக்கும் அளவுக்கு உன்னிடம் திறமை உள்ளது. நீ அதை செய்யவில்லை என்றால் அதற்கு நீ தான் பொறுப்பு.' என்றேன்." என்று பேசினார்.

இவ்வாறு விராட் கோலியின் அறிமுக காலத்தைக் குறித்து ஹர்பஜன் சிங் பகிர்ந்துக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com