தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்.. ராகுல் திராவிட் நம்பிக்கை!

Rahul Dravid.
Rahul Dravid.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதலாவது டெஸ்ட் நாளை (டிச. 26) செஞ்சூரியனில் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா ஒன்றும் கடினமான அணி அல்ல. இந்த தொடரை ரோஹித் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் சூப்பர் ஸ்போர்ட் பார்கில் நாளை நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுனில் நியூலாண்ட்ஸில் நடைபெறுகிறது.கடந்த 21 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவுடன் 23 டெஸ்ட் போட்டிகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது. ஆனால், நான்கு போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

எனினும் செஞ்சூரியனில் முதல் டெஸ்டை இந்தியா, மலரும் நினைவுகளுடனேயே தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும். ஏனெனில் கடந்த 2021-22 இல் இங்கு நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வென்றது. எனினும் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதையடுத்து விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தொடரை இந்தியா வெல்லாத நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சவாலுடனேயே முதல் டெஸ்டை சந்திக்க உள்ளது. இந்திய அணியில் நன்கு விளையாடக்கூடிய பேட்ஸ்மென்கள் இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு குறைதான்.

சூப்பர் ஸ்போர்ட் பார்கில் பயிற்சி முடித்த பின் ராகுல் திராவிட் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய அணியில் ஒருசில நல்ல பேட்ஸ்மென்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். அவர்கள் தென்னாப்பிரிக்காவில் சாதிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

புள்ளி விவரங்களின்படி பார்த்தால் தென்னாப்பிரிக்கா கடினமான அணி போல தோன்றினாலும் இந்திய அணியின் பேட்டிங் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இங்கு விளையாடுவதோ அல்லது தென்னாப்பிரிக்க அணியை வெற்றிகொள்வதோ முடியாத காரியமல்ல. தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆகிச் செல்லும். இங்கிலாந்தைப் போல பந்து ஸ்விங் ஆகாது. ஆனால் பந்துவீச்சு சீராக இருக்காது என்றார் திராவிட்.

இந்திய பேட்ஸ்மென்களுக்கு இந்த போட்டி ஒரு சவாலாக இருந்தாலும், நமது தரப்பிலும் சிறந்த பேட்ஸ்மென்கள் உள்ளனர். அவர்கள் சரியாக, முறையாக விளையாடினால், வெற்றியை கைப்பிடிக்க முடியும் என்றார் திராவிட்.

குறிப்பாகச் சொன்னால், 2006 ஆண்டு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் வென்றது.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி சிறந்த மனிதர்: கங்கனா ரனாவத் புகழாரம்!
Rahul Dravid.

அவரசரமாக தில்லி சென்ற விராட் கோலி, ஞாயிற்றுக்கிழமை திரும்பிவந்து பயிற்சியில் பங்கேற்றார். அவர் தென்னாப்பிரிக்காவுடன் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 719 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 3 சதம், 2 அரை சதங்கள் அடங்கும். அவரது அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கை கொடுக்கும். கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் ஊக்கமளிப்பதாக இல்லை. அவர் 4 போட்டிகளில் விளையாடி 123 ரன்கள்தான் எடுத்துள்ளார். ஆனால், இப்போது முதல் முறையாக ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார். எனவே தொடக்க ஆட்டக்காரராக அவர், தமது திறமையை வெளிப்படுத்துவார் என கருதலாம்.

கே.எல்.ராகுல் 5 டெஸ்ட் போட்டிகளில் 256 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கும் ஓரளவு அனுபவம் இருப்பதால் நடுத்தர ஆட்டக்காரராக அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com