

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. அதற்கு முன்னேற்பாடாக இந்தியாவின் வல்லமையை காட்டும் வகையில் ,2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளது. இந்த போட்டியில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாநகரத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஆரம்ப கட்ட பணிகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது.
இதற்காக உயர்மட்ட விளையாட்டு ஏற்பாடு குழுவை அமைக்கும் நடவடிக்கைகளில் விளையாட்டு துறை அமைச்சர் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவில் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் , அரசு அதிகாரிகள் ஆகியோர்களை இணைத்து சர்வதேச தரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த உயர்மட்ட குழுவில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ராகுல் டிராவிட் , பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விளையாட்டு வீரர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க கருத்துக்களை முன் வைப்பார்கள். சர்வதேச தரத்தில் போட்டிகளை நடத்த ஆலோசனைகளை வழங்குவார்கள்.
மேலும் இந்த உயர்மட்ட குழுவில் விளையாட்டு ஆர்வலராக இருக்கும் தொழிலதிபர்களையும் சேர்த்துள்ளனர். டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ்' (Torrent Pharmaceuticals) நிறுவனத்தின் தலைவரான ஜினல் மேத்தா, பிர்லா குழுமத்தை சேர்ந்தவரும் பிரபல பாடகியுமான அனன்யா பிர்லா ஆகியோரும் இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு , நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஆதரவளிப்பார்கள். மேலும் இவர்கள் இருவரும் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் குறிப்பிட்ட அளவில் நிர்வாகம் செய்து இருப்பதால் , அந்த அனுபவம் காமன்வெல்த் போட்டிகளில் பயனுள்ளதாக இருக்கும்.
காமன்வெல்த் போட்டிகள் விழா ஏற்பாட்டுக் குழுவில் மொத்தம் 12 முதல் 18 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த குழுவிற்கு குழுவிற்கும் தலைமையாக குஜராத் மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஹர்ஷ் சங்கவி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய காமன்வெல்த் விளையாட்டுச் சங்கத்தின் பிரதிநிதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் இடம்பெறுகிறார். ராணுவ மற்றும் விளையாட்டு அமைப்புகளின் சார்பில் அவர் பிரதிநிதித்துவ படுத்தப்பட்டுள்ளார்.
இந்த உயர்மட்ட குழுவில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் விரைவில் இணைக்கப்பட உள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள உள்ளதால் , அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் இக்குழுவில் இணைக்கப்படுவார்கள்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதால், அந்த நகரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. உலகின் பெரிய மைதானங்களில் ஒன்றான நரேந்திர மோடி மைதானம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்லேவ் போன்ற அதிநவீன கட்டமைப்புகள் வசதிகளை கொண்ட மைதானங்கள் பல்வேறு போட்டிகளை நடத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளது.
இதற்கு முன்னர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் , இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற போது, பொருளாதார நெருக்கடி காரணமாக மிகக் குறைவான போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் , இந்தியாவில் இந்த விளையாட்டுப் போட்டிகள் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது.