34 வயதிலேயே ஓய்வை அறிவித்த ரஞ்சி வீரர்.. இந்திய அணித்தான் காரணமா?

Shabaz Nadeem
Shabaz Nadeem

ஜார்க்கண்டைச் சேர்ந்த 34 வயதுடைய ஷாபாஸ் நதீம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட்டில் இனி வாய்ப்பே கிடைக்காது என்பதால்தான் இந்த ஓய்வறிப்பு என்று அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2019ம் ஆண்டு ஷாபாஷ் நதீமுக்குத் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணியில் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் அவரின் சொந்தவூரில் போட்டி நடந்ததால்தான் அந்த வாய்ப்பு. அப்போட்டியில் 17.2 ஓவர்களில் சுமார் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதேபோல் 2021ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் சொல்லி வைத்தமாதிரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்படி விளையாடியும் கூட அவருக்கு அடுத்து ஒருமுறைக்கூட இந்திய அணியில் விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதனால் நதீம் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தார்.

இதனால் அடுத்த வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தார் நதீம். அந்தநிலையில்தான் சமீபத்தில் இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் போட்டி அவரின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. இந்தமுறை கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆகையால் அவர் மிகவும் நொந்து போனார். இதனையடுத்து இப்போது அனைத்து விதமான இந்திய  கிரிக்கெட்டிலும் இருந்துத் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

என்னதான் அவருக்கு இந்திய அணியில் இரண்டே வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும், ரஞ்சி ட்ராஃபியில் அதிரடியாகவே ஒவ்வொரு முறையும் விளையாடி வந்தார்.

ஷாபாஷ் நதீம் இதுவரை 134 உள்ளூர் போட்டிகளில் விளையாடி 175 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதேபோல் 150 டி20 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 140 போட்டிகளில் விளையாடி 542 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
தோனி பதிவிட்ட சூசகமானப் பதிவு.. CSK அணியில் என்னதான் மாற்றம்?
Shabaz Nadeem

மேலும் ஷாபாஷ் நதீம் இனி உலகம் முழுவதும் நடைபெற உள்ள டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்கும் எந்த இந்திய வீரரும் பிசிசிஐயால் நடத்தப்படும் எந்தப் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com