தோனி பதிவிட்ட சூசகமானப் பதிவு.. CSK அணியில் என்னதான் மாற்றம்?

Dhoni
Dhoni
Published on

தோனி தனது ஃபேஸ் புக் தளத்தில் ‘நியூ சீசன், நியூ ரோல்’ என்று பதிவிட்டு அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றப்படுகிறாரா? என்றக் கேள்வி சமூக வலைத்தளங்களில் மேலோங்கி நிற்கிறது.

2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ளது. ஆகையால் ஒவ்வொரு அணியினரும் தங்களது அணியை வலிமையாக்கப் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர்தான் லக்னோ அணியின் துணைக் கேப்டனாக க்ருணால் பாண்டியாவை நீக்கிவிட்டு நிக்கோலஸ் பூரானைத் தேர்ந்தெடுத்தார்கள். அதனையடுத்து தற்போது தோனியே தனது ஃபேஸ் புக் பக்கத்தில் 'நியூ சீசன், நியூ ரோல்' என்றுப் பதிவிட்டிருக்கிறார்.

facebook
facebook

நியூ ரோல் என்றால் பழைய பதவியான கேப்டன் பதவியை விட்டு விலகிப் புது பதவிக்குச் செல்லவுள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

தோனி 2008ம் ஆண்டிலிருந்து, அதாவது சிஎஸ்கே அணி உருவானதிலிருந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இடையில் 2022ம் ஆண்டு மட்டும் சிலப் போட்டிகளுக்கு ரவிந்திர ஜடேஜா கேப்டனாக இருந்தார். இந்த ஆண்டுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போதுத் திடீரென தனது பக்கத்தில் அவ்வாறு பதிவிட்டிருக்கிறார். ஆகையால் அவர் இந்த ஆண்டு கேப்டனாக செயல்படமாட்டாரோ என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் சிஎஸ்கே அணிக்குப் புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கவுள்ளனரா? என்ற கேள்விகளும் வரத் தொடங்கிவிட்டன.

இதையும் படியுங்கள்:
ஷார்துல் தாக்கூர்: அடுத்த ரவிந்திர ஜடேஜா சாய் கிஷோர்தான்!
Dhoni

ஒருவேளை தோனி கேப்டன் பதவியிலிருந்து நீங்கினால் இருவர் மட்டுமே அடுத்த ஆப்ஷனில் ரசிகர்கள் வைத்துள்ளனர். ஒருவர் ஜடேஜா மற்றொருவர் ருத்துராஜ் கெய்க்வாட். ஜடேஜாவிற்கு தற்போது 35 வயதாகிறது. ஒருவேளை அவரைக் கேப்டனாகத் தேர்ந்தெடுத்தால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும். மேலும் ஜடேஜா ஏற்கனவே சில காலம் கேப்டனாக இருந்துவிட்டார். ஆனால் ருத்துராஜ் இளம் வீரர் என்பதோடு அவருக்கு 27 வயது மட்டுமே என்பதால் நீண்டக் காலம் கேப்டனாக செயல்பட முடியும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சுரேஷ் ரெய்னா, ராயுடு போன்ற முன்னணி வீரர்கள் ருத்துராஜ்தான் அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டனாக வருவார் என்று கூறியிருக்கின்றனர்.

தோனி போட்டப் பதிவின் சூசகம் அவிழ்க்கப்பட்டால் மட்டுமே சிஎஸ்கே அணியில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பது தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com