

கிரிக்கெட் விளையாட்டில் சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை காண்போம்...
முதல் முதலில் ஒரே நாளில் 500 ரன்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 500 ரன்களுக்கு மேல் எடுத்து சாதித்த முதல் அணி என்ற பெருமை இங்கிலாந்து அணிக்கு உரியது. 1924 ல் (28 ஜூன் - 01 ஜூலை) லார்ட்ஸ் டெஸ்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைப்பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் 273 ரன்கள்.
பாப் கேட்டரல் 120 ரன்கள் (16 பவுண்டரிகள்)
பிரெட் சஸ்ஸ்கிண்ட் 64 ரன்கள். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 28 ரன்கள்.
அடுத்த நாள் ஓய்வு தினம்.
மூன்றாம் நாள் (டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாம் நாள்) (30 ஜூன், 1924) சரித்திரம் படைக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 531 ரன்களுக்கு டிக்ளர் செய்தனர்.
அந்த ஒரு தினம் மட்டும் இங்கிலாந்து அணி 4 வீரர்கள் எடுத்த மொத்த ரன்கள் 503. இது ஒரு வரலாறு படைத்த ரிகார்டு.
ஒரு இரட்டை சதம் உட்பட மூன்று சதங்கள் அடங்கும். துவக்க வீரர் ஜாக் ஹாப்ஸ் 211. மற்றும ஒரு துவக்க வீரர் ஹெர்பர்ட் சுட்ச்லிஃப் 122.
பிரேங்க் உல்லே 134* நாட் அவுட்
பாஸ்டி ஹென்றேன் 50* நாட் அவுட்
முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 268
இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் 142
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடித்துக் கொண்டதும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் அன்றைய தினம் 19 ரன்கள் எடுத்தனர்.
ஆக மொத்தம் அன்றை 30 ஜூன் 1924 தினம் மட்டும் 522 ரன்கள் சேர்க்கப்பட்டு முதன் முறையாக ரிகார்டு ஏற்படுத்தப்பட்டது.
இரண்டாவது இன்னிங்சில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் தென் ஆப்பிரிக்க அணி ஆனதால் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர்.
ஒரு நாளில் இங்கிலாந்து அணி எடுத்த 500 க்கும் அதிகமான ரன்கள் ரிகார்டு 78 வருடங்கள் முறியடிக்கப் படாமல் இருந்தது.
இதே துவக்க வீரர் ஹெர்பர்ட் சுட்ச்லிஃப் யார்க்ஷையர் என்ற அணிக்காக பெர்ஸி ஹோல்ம்ஸ் என்பவருடன் ஜோடி சேர்ந்து துவக்கி 555 ரன்கள் முதல் விக்கெட்டிற்கு பார்னர்ஷிப்பில் எடுத்தார். இது எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிரான முதல் தர ஆட்டத்தில்.
ஒரு இன்னிங்ஸ் 313 ரன்களில் யார்க்ஷையர் அணி வென்றது.
அந்த ஆட்டத்தில் பெர்ஸி ஹோல்ம்ஸ் 224 * நாட் அவுட்
ஹெர்பர்ட் சுட்ச்லிஃப் 313.
இந்த ஆட்டம் (15 - 17, 1932) நடைப்பெற்றது.
இந்த 555 ரன்கள் முதல் விக்கெட்டுக்கான சாதனை இன்று வரையில் தொடர்கின்றது குறிப்பிடதக்கது.
8 ஓவர்களில் ஒரு ரன் கூட தராமல் மிரட்டிய பௌலரின் அரிய கிரிக்கெட் சாதனைகள்.
பிரைன் லங்போர்ட் என்ற வீரர் இங்கிலாந்தில் சொமெர்செட் அணிக்காக 21 வருடங்களுக்கு மேலாக முதல் தர கிரிக்கெட் ஆடியுள்ளார்.
அதே அணிக்கு லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் பங்கு பெற்றவர் இந்த ஆப் ஸ்பின் பவுலர் ஆடிய 510 முதல் தர ஆட்டங்களில் 1410 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார். 5 வருடங்கள் வருடத்திற்கு 100 விக்கெட்டுக்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
1969 ல் ஒரு 40 ஓவர் மேட்சில் இவர் ஏற்படுத்திய சாதனை சிறப்பானது. அந்த மேட்சில் அதிக பட்சம் ஒரு வீரர் 8 ஓவர்கள் மட்டும் தான் பவுலிங் செய்ய முடியும்.
பிரைன் லங்போர்ட் அவரது 8 ஓவர்களையும் 8 மெய்டன் ஓவர்களாக வீசி அசத்தினார்.
இவரது பவுலிங் அந்த ஆட்டத்தில்
8 ஓவர்கள்
8 மெய்டன்கள்
0 ரன்கள்
0 விக்கெட்டுக்கள்
உதவிய வளர்ப்பு நாய்.
இந்த பவுலர் நியூஸியலாந்தில் பிறந்து ஆஸ்திரேலிய அணிக்காக 37 டெஸ்டுக்கள் விளையாடினார். இவர் கிரிக்கெட் ஆடிய கால கட்டத்தில் நியூஸியலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ஆட துவங்காததால், இவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார்
மிக சிறந்த லெக் பிரேக் கூக்ளி பவுலராக திகழ்ந்த இந்த வீரர் பெயர் கிளாரி கிரிம்மேட்.
37 டெஸ்டுகளில் 216 விக்கெடுக்கள் வீழ்த்தியவர். கிளாரி கிரிம்மேட் அறிமுக மற்றும் கடைசி டெஸ்டுகளிலும் தலா 11 விக்கெட்டுக்கள் கைப் பற்றியவர். இவரது அறிமுக டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக, சிட்னி மைதானத்தில் (27 பிப்ரவரி - 04 மார்ச், 1925)
கடைசி டெஸ்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக. டர்பன் மைதானத்தில் (28 பிப்ரவரி - 03 மார்ச், 1936)
இவரது கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 11 விக்கெட்டுக்கள் எடுத்தும் (7 மற்றும் ) ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 6 ரன்கள் வித்தியாசயத்தில் பெரிதும் வெற்றி பெற உதவி இருந்த போதிலும் , இவர் மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கு பெற வாய்ய்ப்பு அளிக்கப்படவில்லை, இவரது அதிக வயதை காரணம் காட்டி. அதே வேளையில் இவரை விட அதிக வயது கொண்ட பிளாக்கி, ஐரோன்மொங்கர் போன்ற வீரர்கள் இவரை விட அதிக வயதில் அறிமுக ஆட்டங்கள் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வெகு விரைவில் 200 டெஸ்ட் விக்கெட்டுக்கள் எடுத்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய சிறந்த விக்கெட் கீப்பர் ஆக திகழ்ந்த பெர்ட் ஓல்ட்பீல்ட் விளையாடிய 54 டெஸ்டுகளில் 52 ஸ்டும்பிங்கள் செய்து அதற்காக முதலிடம் வகித்து வருகிறார். அப்படி பெர்ட் ஓல்ட்பீல்ட செய்த அந்த 52 ஸ்டும்பிங்களில் 28 முறை இந்த பவுலர் கிரிம்மேட் பவுலிங்கில் சாதித்துள்ளார்.
தனது பவுலிங் சிறப்பாக வீச இடை விடாது பயிற்சியில் இடம் பெற்று வருவதை வழக்கப் படுத்திக்கொண்டு இருந்தார் கிரிம்மேட்.
அதற்காக தனது வீட்டின் பின் புறத்தில் ஒரு கிரிக்கெட் பிட்ச் பிரத்தியோகமாக அமைத்து தனியாக பவுலிங் வீசி பழகி வந்தார்.
ஒவ்வொரு ஓவர் முடிவில் அவரால் வீசப்பட்ட பந்துக்களை கவ்வி எடுத்துக்கொண்டு அவரிடம் கொடுக்க அவரது வளர்ப்பு நாய் (பாக்ஸ் டெரியர் இனத்தை சார்ந்தது ) மிகவும் உதவியது. அதனால் கிரிம்மேட் அவர்களால் தங்கு தடையின்றி சிறப்பாக பவுலிங் வீசி பழகி அவரது திறமையை நன்கு பட்டை தீட்டிக் கொண்டு சாதிக்க முடிந்தது.
இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம், கூகுள் தேடல்களிலும் சாதாரண விவாதங்களிலும் எளிதில் கிடைக்காத கிரிக்கெட் வரலாற்றின் அரிய பொக்கிஷங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம். உங்கள் நண்பர்களுடனான கிரிக்கெட் உரையாடல்களில், புள்ளிவிவரங்களுடன் கூடிய ஒரு சிறந்த கிரிக்கெட் நிபுணராக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் தனித்துவமான அறிவை இது உங்களுக்கு வழங்கும்.