தாலிபானுக்கு எதிராக குரல் கொடுத்த ரஷீத் கான்!

Rashid khan
Rashid khan
Published on

ஆப்கானில் பெண்களின் மருத்துவ கல்லூரிக்குத் தடை விதித்த தாலிபான் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஷீத் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு பலவகையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பெண்களின் அடிப்படை விஷயங்களுக்கே தடை விதிக்கப்பட்டது.

அதில் பெண்களுக்கான கிரிக்கெட் அணியை கலைத்தனர். அப்போது யாருமே தாலிபானின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இருந்தனர். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். தற்போது பெண்கள் மருத்துவத்துறையில் படிக்க அங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் ஆண்கள் மற்றும் பெண்களின் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார். “ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் அதன் இளைஞர்களைப் பொறுத்தது, மேலும் பெண்கள் இதில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். கல்வி என்பது அடிப்படை மனித உரிமை, மேலும் இதுபோன்ற முக்கியமான துறைகளில் இருந்து பெண்களைத் தடை செய்வது நாம் பின்னோக்கிச் செல்லும் படியாகும்.

நாட்டிற்கு அனைத்து துறைகளிலும் குறிப்பாக மருத்துவ துறையில் வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை என்பது பெண்களையே நேரடியாகப் பாதிக்கும். நமது சகோதரிகள் மற்றும் முக்கியமாக தாய்மார்களுக்கு பெண் மருத்துவர்கள் மிகவும் அவசியம்.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், அதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வி வழங்குவது பொறுப்பு மட்டுமல்ல, அது மிகப்பெரிய கடமையாகும்.” என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
அசாமில் மாட்டிறைச்சி உண்ணத் தடை!
Rashid khan

தாலிபானின் செயல்களுக்கு இதுவரை இதுபோல் யாரும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், முதல்முறை ரஷித் கான் தாலிபானுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த வேண்டுகோளை தாலிபான் அரசு காதில் வாங்கிக்கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இனியாவது பலர் முன்வந்து இதற்கு எதிராக குரல் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் முதல் குரல் திடமான குரல் என்பதால், அடுத்தடுத்த குரல்கள் மிகவும் வலிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com