meta property="og:ttl" content="2419200" />

RCB Vs CSK: மழையால் யாருக்கு லாபம்? ரசிகர்கள் போட்ட கணக்கு!

Virat Kohli and MS Dhoni
CSK vs RCB
Published on

நாளை மறுநாள் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே ஒரு மாபெரும் போட்டி நடைபெறவுள்ளது. அப்படியிருக்கையில், பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக போட்டி ரத்தானால் எந்த அணிக்கு லாபம் என்று ரசிகர்கள் ஒரு கணக்கு போட்டுள்ளனர்.

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி உட்பட 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் 7 தோல்வி, 6 வெற்றி உட்பட 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 சதவீத வெற்றி வாய்ப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. பெங்களூரு அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி மோத உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், அதிக ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பெங்களூரு அணி 20 சதவீத வெற்றி வாய்ப்புடன் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது குறைந்தது 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் போட்டியில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதனால், பெங்களூரு மற்றும் சென்னை அணிகளின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில் மே 18ஆம் தேதி பெங்களூரில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை 80 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் மழை பெய்யுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
Federation Cup 2024 : தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா!
Virat Kohli and MS Dhoni

புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் +0.528 ஆகவும், ஆர்சிபி அணியின் ரன் ரேட் +0.387 ஆகவும் உள்ளது. இதனால், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டால், ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். ஒருவேளை, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டால், அது பெங்களூரு அணிக்கு சாதகமாக அமையும்.

அதேபோல் மழை பெய்தால் அணியின் வெற்றி, தோல்வியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11 முறை டாஸை இழந்துள்ளதால், ஆர்சிபி அணிக்கு சாதகமாக சூழல் ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com