ஐபிஎல் 2026: கொல்கத்தாவின் சவாலை முறியடித்து பெங்களூரு அணி திரில் வெற்றி..!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
RCB team
RCB teamimage credit- sports.ndtv.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கும் 57-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு முடிவில்லை, 5 தோல்வி கண்டு 9 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் கொல்கத்தாவும், 15-ல் பெங்களூருவும் வென்றுள்ளன.

ராய்ப்பூரில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் பெங்களூரு அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்தது.

logo
Kalki Online
kalkionline.com