ஐபிஎல் 2026 :மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி..!!

ராய்ப்பூரில் இன்று நடந்த 54வது லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலசர்ஸ் வெற்றி பெற்றது.
RCB vs MI
RCB vs MI image credit-deccanherald.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2 லீக் ஆட்டங்களில் ராய்ப்பூரில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலசர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பெங்களூரு அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளை பெற்றுள்ளது.

மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி கண்டு ஏறக்குறைய பிளே-ஆப் வாய்ப்பை இழந்து விட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றால் மும்பை அணிக்கு வாய்ப்பு முழுமையாக காலியாகி விடும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்குநேர் சந்தித்து கொண்டதில் 19-ல் மும்பையும், 16-ல் பெங்களூருவும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களுரு அணியின் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 7-வது வெற்றியை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com