RCB Vs MI: தொடர் தோல்விகளில் RCB… ஃபார்முக்கு வந்த MI!

RCB vs MI
RCB vs MI

நடப்பு ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி நேற்று பெங்களூரு அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் ஃபார்மிற்கு வந்தது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் விராட் மற்றும் டூ ப்ளஸி ஆகியோர் ஓப்பனராக களமிறங்கினார்கள். விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்து மோசமாக அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

விராட் கோலிக்கு அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். இதனால் பெங்களூர் அணி தடுமாறியது. அதன்பின்னர் களமிறங்கிய பட்டிதரும், டூப்ளஸியும் இணைந்து 82 ரன்கள் அடித்தனர். பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்களும், டூப்ளஸி 40 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். இந்தநிலையில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

மும்பை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இணைந்து 69 ரன்கள் அடித்து துவக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் ஷர்மா 38 ரன்களில் வெளியேறியவுடன், ஹார்திக் களமிறங்கி தனது முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து 6 பந்துகளில் 21 ரன்கள் குவித்து 20 ஓவர் வரை அவுட்டாகாமல் விளையாடினார்.

இஷான் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் சூர்ய குமார் யாதவும் 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். மும்பை அணியில் களமிறங்கிய வீரர்கள் அனைவருமே தன் பங்குக்கு ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு வெளியேறியதால், அணியின் ஸ்கோர் வேகமாக ஏறியது.

இதையும் படியுங்கள்:
GT vs RR: சொந்த மண்ணில் தனது முதல் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி!
RCB vs MI

இதனால் மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே  199 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. மேலும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மும்பை அணி, இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஆனால் பெங்களூர் அணி ஆறு போட்டிகளில் விளையாடி, அதில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com