“ஈ சலா கப் நம்து” கோப்பையைக் கைப்பற்றிய RCB மகளிர் அணி... கேப்டன் ஸ்மிருதி நெகிழ்ச்சி!

RCB women's team in IPL final
RCB women's team in IPL final
Published on

மகளிருக்கான ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி கோப்பையை வென்று ரசிகர்களின் 17 ஆண்டுக்காலக் கனவை நினைவாக்கியுள்ளது.

பல ஆண்டு காலமாக ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றிக்காகப் போராடியே வருகிறது. எவ்வளவு வலிமையான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இருந்தாலும் கூட சில காரணங்களால் கோப்பையை வெல்லவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. ஆர்சிபியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளைப் பொறுத்தவரை என்னத்தான் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் தோல்வியடையும்போது ரசிகர்கள் அணிகளுக்கு ஆதரவு அளிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அதேபோல் நிறைய கலாய்க்கப்பட்ட அணி என்றாலும் அது ஆர்சிபி அணிதான்.

இந்தநிலையில் மகளிருக்கான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்துவந்தது. அதன் இறுதிபோட்டி நேற்று டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 113 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.3 ஓவர்களிலேயே 115 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இதனால் ஆர்சிபி ஆண்கள் அணி செய்யமுடியாதச் சாதனையை மகளிர் அணி செய்துக்காட்டியிருக்கிறது.

17 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு ஆர்சிபி மகளிர் அணி மூலம் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள விராட் மற்றும் ஸ்மிருதி ரசிகர்கள் உற்சாகமாக இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள முக்கியமானச் சாலைகளில் ரசிகர்கள் ஒன்று திரண்டு உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

உலககோப்பையை வென்ற அளவிற்கு கொண்டாட்டம் உள்ளது. பெங்களூர் தண்ணீர் பிரச்சனையில் சில காலமாகத் துவண்டு வந்த நிலையில் இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு நிம்மதியை அளித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ரஞ்சி தொடரை 42வது முறையாக கைப்பற்றிய மும்பை அணி!
RCB women's team in IPL final

இதனையடுத்து ஆர்சிபி அணி வெற்றிபெற்றவுடன் அணியின் கேப்டன் ஸ்மிருதி பேட்டி அளித்தார். அப்போது, "ஈ சலா கப் நம்தே என்பது இனி இல்லை, ஈ சலா கப் நம்து" என்று கூறி நெகிழ்ச்சியடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களையே ஒட்டுமொத்தமாக நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த வெற்றி அடுத்து நடைபெறப்போகும் ஆண்கள் ஐபிஎல் தொடரில் ஆர்சிபிற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ஸ்மிருதி போல் விராட் கோலி அணிக்குக் கோப்பையை வென்றுத்தந்தால், அது அணியின் கோப்பையாக மட்டும் இருக்காது. இந்திய ரசிகர்களின் பல நாள் கனவுடைய நிஜ சின்னமாகவே கருதப்படும். அதேபோல் ஒரே ஆண்டில் இரட்டை இந்திய வரலாற்றுச் சாதனைகளாகவும் கருதப்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com