Mumbai team
Mumbai team

ரஞ்சி தொடரை 42வது முறையாக கைப்பற்றிய மும்பை அணி!

Published on

ரஞ்சி தொடரின் இறுதிபோட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 42 வது முறையாக ரஞ்சி ட்ராஃபி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த ஆண்டு ரஞ்சி தொடரின் இறுதிபோட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதில் ஷார்துல் தாக்கூர் அரைசதம் அடித்தார்.

ஆனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது விதர்பா அணிக்கு முதல் சரிவாக அமைந்தது. மும்பை அணி சார்பாக பவுலிங் செய்த குல்கர்னி, முலானி மற்றும் தனுஷ் அகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அபாரமாக விளையாடினர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணி 418 ரன்கள் எடுத்து எதிரணிக்குக் கடினமான இலக்கைக் கொடுத்தது. அதில் முஷீர் கான் 136 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 95 ரன்களும் எடுத்து அணிக்கு அதிக ரன்களைச் சேர்த்தனர். ஆகையால் விதர்பா அணிக்கு 538 ரன்கள் இலக்காக அமைந்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 10 ரன்களுடன் இருந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்திருந்தது. பொதுவாக எப்போதும் நான்கு நாட்கள் நீடிக்கும் போட்டி இந்தமுறை ஐந்தாவது நாள் வரை நீடித்தது.

விதர்பா அணிச் சார்பாகப் பேட்டிங் செய்த அக்ஷய் வத்கர் மற்றும் ஷர்ஷ் துபே இருவரும் சேர்ந்து ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை விளையாடினர். அவர்கள் இருவரும் சேர்ந்து 333 ரன்கள் எடுத்தனர். அக்ஷய் வத்கர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படியுங்கள்:
சச்சினின் சாதனையை முறியடித்த சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான்!
Mumbai team

பின்னர் ஹர்ஷ் துபே மட்டும் 65 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் வந்த அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் விதர்பா அணி 368 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் 42வது முறையாக வெற்றிபெற்று சாதனைப் படைத்தது.

மிகவும் திறமையான வீரர்களைக் கொண்ட விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் மட்டும் போதுமான ரன்களை எடுத்திருந்தால் போட்டியின் போக்கே மாறியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

logo
Kalki Online
kalkionline.com