"ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஓவர்களைக் குறைக்க வேண்டும்" – ஆரோன் ஃபின்ச் ஆலோசனை!

Aron finch
Aron finchImge credit: Daily pioneer

ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபக்காலமாக விறுவிறுப்பே இல்லாமல் நடைபெறுகிறது என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் முழு போட்டியையும் பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லாமல், பார்ப்பதையே நிறுத்துகிறார்கள். இந்த சலிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல கிரிக்கெட் வட்டாரத்தினருக்கும்தான். ஆகையால் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஓவர்களைக் குறைக்க வேண்டுமென்று ஐசிசிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்பெல்லாம் நான்கு, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பதற்குத்தான் ஒரு சலிப்பு ஏற்படும். ஏனெனில் வெகு நேரம் நடைபெறும் போட்டியில் வீரர்களின் அதிகமான தடுப்பாட்டம் பார்ப்பவர்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தும். எப்போதாவது அடிக்கும் சில பவுண்டரிஸ்களுக்கும் சிக்ஸர்களுக்கும் வெகு நேரம் காத்துக்கொண்டிருப்பது போல் தோன்றும். டி20 போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்காது என்பதே உண்மை.

ஆனால் சமீபக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் நிறைய விதிமுறைகள் கொண்டுவந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர். அதாவது இது டெஸ்ட் போட்டியா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு விதிகள் மூலம் ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டுவந்துவிட்டனர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போக்கை மட்டும் மாற்றவே இல்லை. இதனால் இப்போது ஒருநாள் போட்டி சலிப்பை ஏற்படுத்துவதோடு தனது முக்கியத்துவத்தையும் இழந்து வருகிறது.

குறிப்பாக சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிப்பரப்பு செய்த டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதாவது, "50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 40 ஓவராக குறைக்க வேண்டும். ஏனெனில் 50 ஓவர் என்பதால் போட்டி நீண்ட நேரம் நடைப்பெறுகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 40 ஓவர் கொண்ட ஒரு ப்ரோ போட்டியை வெற்றிகரமாக சோதனை செய்து வருகின்றது. இந்த 40 ஓவர் போட்டியை பலரும் வரவேற்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
"கேப்டன் பதவியை என்னால் நிராகரிக்க முடியவில்லை" - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்!
Aron finch

இதனை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தலாம். 50 ஓவர்கள் போட்டியின் நடுப்பகுதியில் ஆட்டம் தோய்வடைகிறது. இதனை 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றினால் மட்டுமே இந்த தோய்வை சரி செய்ய முடியும். மேலும் சிறிது பலம் குறைந்த அணிகளும் வெற்றியடைய முடியும். ஏற்கனவே 60 ஓவர்களிலிருந்துதான் 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அதனைக் குறைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றுவதற்கு இதுதான் நல்ல முடிவாக இருக்கும்" என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com