ஜெர்சி நம்பர் 18 மற்றும் 45க்கு ஓய்வுக்கொடுங்கள் – ரெய்னா வேண்டுகோள்!

Virat, Rohit and Raina
Virat, Rohit and Raina

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஓய்வுப்பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஜெர்ஸி நம்பருக்கு ஓய்வுக் கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பையை இந்திய அணி தனது விடாமுயற்சிக்கு பிறகு தட்டித் தூக்கியது. இதனையடுத்து இந்திய மக்களின் கொண்டாட்டம் எல்லையைக் கடந்துச் சென்றது. அதேபோல் வீரர்களும் அந்தக் கோப்பையை வைத்துக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்தனர். இறுதிப்போட்டி முடிந்தும்கூட அங்கு ஏற்பட்ட சூறாவளியால் இந்திய அணியால் நாடு திரும்ப முடியவில்லை. இதனையடுத்து பல தடைகளுக்குப் பின்னர் இந்திய அணி ஒருவழியாக நாடு திரும்பியது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற்று இந்தியா திரும்பிய நிலையில் மும்பையில் ரசிகர்கள் குவிந்து கோலாகல வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி நேரில் வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் கிரிக்கெட் வட்டாரத்தினரும் முன்னாள் வீரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் சுரேஷ் ரெய்னாவும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

"இந்திய அணியின் இரு ஜாம்பவான்களாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் விளங்குகிறார்கள். டி20 கிரிக்கெட்டில் சரியான நேரத்தில் இருவரும் ஓய்வு பெறுகின்றனர். ஓய்வு பெற இதைவிட மிகச் சிறந்த தருணம் வேறு எதுவும் கிடையாது என்று நினைக்கிறேன்.

இரு வீரர்களையும் கௌரவிக்கும் விதமாக இனி எந்த ஒரு வீரருக்கும் நம்பர் 18 மற்றும் நம்பர் 45 ஜெர்சியை பிசிசிஐ வழங்கக்கூடாது. இந்த இரண்டு ஜெர்சிக்கும் பிசிசிஐ ஓய்வு வழங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முயற்சியை என்றும் கைவிடமாட்டேன்: கிறிஸ்டியானோ ரோனால்டா!
Virat, Rohit and Raina

சூரியகுமார் யாதவ் பிடித்த கேச்சை என் வாழ்நாளில் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது. எப்படி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சட்ஸ் அடித்த கேச்சை கபில்தேவ் பிடித்தாரோ அதேபோல் சூரியகுமார் யாதவ் கேட்ச் அமைந்திருந்தது. இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் கொண்டாடப்படாத வீரராக அக்சர் பட்டேல் இருக்கிறார். இந்திய அணிக்கு எப்போதெல்லாம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் ரன்களும் பந்துவீச்சில் விக்கெட்டுகளும் எடுத்து அசத்துகிறார்.” இவ்வாறு சுரேஷ் ரெய்னா இந்திய வீரர்களைப் பாராட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com