தோனி, ஹர்திக் பாண்டியா வரிசையில் இணையும் ரிங்கு சிங்!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டி-20 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Rinku Singh
Rinku Singh

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டி-20 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் அதிரடி காட்டினாலும், இறுதியில் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டம்தான் வெற்றிக்கு கைகொடுத்த்து.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்கள் எடுத்தார். ஜோஷ் இங்கிலிஷ் அதிரடியாக ஆடி 110 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இஷான் கிஷான் 58 ரன்களும், கேப்டன் சூரிய குமார் அதிரடியாக ஆடி 80 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வெற்றிக்கு கைகொடுத்தது ரிங்கு சிங்தான், அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் எடுத்த 22 ரன்களில் 4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டம் முடிய ஒரு பந்து மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவுக்கு அவர் வெற்றி தேடித்தந்தார்.

குறைந்த நேரம் மட்டுமே களத்தில் நின்றாலும் ஒரு திறமையான வீரருக்கு இணையாக விளையாடினார்.

இதையும் படியுங்கள்:
உலக கோப்பை தோல்வியை அடுத்து பிரதமர் மோடி கூறியதை முகமது ஷமி பகிர்ந்துள்ளார்!
Rinku Singh

ரிங்கு சிங், கடைசி நேரத்தில் களம் இறங்கினாலும் நின்று ஆடி அணிக்கு வெற்றித் தேடித்தருவது இது மூன்றாவது முறையாகும். கடந்த 5 வருடங்களாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆனாலும் அவரது ஆட்டத்தில் திறமை ஒளிந்துகொண்டிருந்தது.

இந்தியா தோல்வியின் விளம்பில் இருந்தபோது எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் கடைசி நேரத்தில் வெற்றிக்கு கைகொடுத்ததுண்டு. அந்த வரிசையில் இப்போது ரிங்கு சிங்கும் சேர்ந்து கொண்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. வரும் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com