SRH Vs RCB: சாதானைப் படைத்த ஹைத்ராபாத் அணி… போராடி தோற்ற RCB !

SRH Vs RCB
SRH Vs RCB

IPL தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஹைத்ராபாத்தின் சாதனையை ஹைத்ராபாத் அணியே முறியடித்துள்ளது. ஹைத்ராபாத்தின் வலுவான இலக்கை அடைய முடியாமல் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைத்ராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் மற்றும் ஹெட் ஆகியோர் பவர் ப்ளே முடிவில் 76 ரன்களைச் சேர்த்து அட்டகாசமாக விளையாடினார்கள். சரியாக 7.1 ஓவரிலேயே 100 ரன்கள் அடித்தது ஹைத்ராபாத் அணி. பெங்களூரு அணியின்  பந்துவீச்சாளர் டாப்லீ வீசிய 8வது ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் அவுட்டாகி வெளியேறினார்.

பெங்களூரு அணி, பவுலிங்கில் ஒருபக்கம் ரன்களை வாரி வழங்கினாலும், மறுபக்கம் ஃபீல்டிங்கும் சரியில்லாததால் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தது. அந்தவகையில் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து IPL வரலாற்றில் அதிவேக சதத்தின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்தது.

அடுத்ததாக, பெங்களூரு அணி 288 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. விராட் கோலி 20 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ் உட்பட 42 ரன்களை எடுத்து வெளியேறினார். அதேபோல் கேப்டன் ஃபாஃப் 28 பந்துகளில் 62 ரன்களுடன் வெளியேறினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விரைவிலேயே அவுட்டானதால் அணியின் இலக்கை அடைய தடுமாற்றம் ஏற்பட்டது.

பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறினார். மற்ற வீரர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படி ரன்களை எடுக்கவில்லை. இறுதியாக களமிறங்கிய அனுஜ் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 20 ஓவர்கள் முடிந்தது.

இதையும் படியுங்கள்:
டி20 உலககோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு – Brett lee
SRH Vs RCB

இதனால் பெங்களூரு அணியால் இலக்கை அடைய முடியவில்லை. பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.   

ஹைத்ராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக அதிக ரன்களை எடுத்துள்ளது. முதலில், மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து நேற்று 287 ரன்கள் எடுத்து தனது சாதனையையே முறியடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com