ரிஷப் பந்த் தன்னைத் தானே கீழிறக்கி கொள்வது சரியா? - சத்தேஷ்வர் புஜாரா ஓபன் டாக்!

Pant - Pujara
Rishabh Pant
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒருசில இந்திய வீரர்களின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் கூட சொதப்பி வருகிறார். டெல்லி அணியில் இருந்து விலகிய பின், லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்துகிறார் ரிஷப் பந்த்.

ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனதும் இவர் தான். ஆனால் இவரது பேட்டிங் நடப்பு தொடரில் சொதப்பலாகவே உள்ளது. மற்ற வீரர்களின் பேட்டிங் மற்றும் பௌலிங்கால் தான் லக்னோ சில போட்டிகளை வென்றது. இந்நிலையில் பின்வரிசையில் இறங்கி விளையாட ரிஷப் பந்த் ஒன்றும் ஃபினிஷர் கிடையாது என சத்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலிருந்தே பேட்டிங்கில் சொதப்பி வரும் பந்த், ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். அதுவும் குறைந்த ஸ்டிரைக் ரேட்டுடன் மந்தமாகவே விளையாடினார். வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை இம்முறை ரிஷப் பந்த் தவற விட்டுள்ளார். விக்கெட் கீப்பங் மற்றும் கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதுமா? அணிக்குத் தேவையான நேரத்தில் ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம் அல்லவா என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றனர்.

ரன் குவிக்கத் தடுமாறி வரும் ரிஷப் பந்த், பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றி வருகிறார். இருப்பினும் இதில் பலன் கிடைக்கவில்லை. கடைசியாக டெல்லியுடன் நடந்த ஆட்டத்தில் 7வது வரிசையில் பந்த் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தோனி தான் எப்போதும் இதுபோல் கீழ்வரிசையில் பேட்டிங் செய்ய வருவார். ஆனால் ரிஷப் பந்த் பின்வரிசையில் இறங்குவது இதுதான் முதல்முறை. இதனைக் கண்டு தான், தோனி போல் ரிஷப் பந்த் ஃபினிஷர் கிடையாது என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் சத்தேஷ்வர் புஜாரா.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“டாப் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ரன்களைக் குவிக்க வேண்டிய ரிஷப் பந்த் பின்வரிசையில் இறங்கி, மந்தமாக விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியம் தான். அவர் ஃபினிஷர் அல்ல என்பதை எப்படி மறந்தார். ஒருவேளை ஃபினிஷிங் செய்ய நினைத்திருந்தால், அதற்கேற்ப ரன்களைக் குவித்திருக்க வேண்டுமல்லவா. ஆனால் அதிலும் பந்த் கோட்டை விட்டுள்ளார்.

தோனியைப் போல் முயற்சி செய்யாமல் டாப் ஆர்டரில் இறங்கி விளையாடுவது தான் ரிஷப் பந்திற்கு பொருத்தமாக இருக்கும். ஒருசில போட்டிகளில் ரன் குவிக்க முடியவில்லை என்றால், அதற்காக தன்னைத் தானே கீழிறக்கி கொள்வது சரியான முடிவாக இருக்காது. ஆகையால் டாப் ஆர்டர் அல்லது மிடில் ஆர்டரில் விளையாடினால் தான் ரிஷப் பந்த்தின் இயல்பான ஆட்டம் வெளிப்படும்”

என புஜாரா அறிவுறுத்தியுள்ளார்.

லக்னோ அணியில் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் மட்டுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் விரைவில் ஆட்டமிழந்தால் லக்னோ அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போகிறது. ஒரே வீரரை மட்டும் நம்பியிருக்காமல், மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக ரிஷப் பந்த், விரைவிலேயே ஃபார்முக்குத் திரும்பினால் தான் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆபத்தான வீரர் யார்? ரிக்கி பாண்டிங் கருத்து என்ன?
Pant - Pujara

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com