Ind vs eng
Ind vs eng

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டியின் கேப்டன் இவர்தான்… பிசிசிஐ அறிவிப்பு!!

Published on

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வரும் ஜூன் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் கேப்டன் குறித்து பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

சமீபக்காலமாக ரோஹித் ஷர்மா பல விமர்சனங்களை சந்தித்து வந்தார். ஆஸ்திரேலியா உடனான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. அப்போதே பிசிசிஐ ரோஹித் ஷர்மாவை வார்ன் செய்தது. இதனையடுத்து வரும் சாம்பியன்ஷிப் ட்ராபியில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தால் மட்டுமே ரோஹித் ஷர்மாவால் இந்திய அணியில் தொடர முடியும் என்ற நிலை வந்தது.

இதுவே ரோஹித் ஷர்மாவுக்கு பிசிசிஐ அளித்த கடைசி வாய்ப்பு.

இந்த ஒரே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியை சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையில் வெற்றியடைய வைத்தார் ரோஹித் ஷர்மா.

ஆனால், தொடர்ந்து கேப்டன்ஷிப்பில் சொதப்பி வந்த ரோஹித் ஷர்மா, மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவது கேள்விக்குறிதான் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஒருவேளை சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இந்திய அணி தோல்வியடைந்தால், கண்டிப்பாக கேப்டன் பதவியில் ரோஹித் தொடர்வது கஷ்டமாகியிருக்கும். ஆனால் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றதால், அவரின் கம்பேக்கை உறுதி செய்தார்.

சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக வழி நடத்திய ரோஹித் ஷர்மா இந்த தொடர் மூலம் பல சாதனைகளையும் படைத்திருந்தார். ஆகையால் பிசிசிஐ எந்த சந்தேகமும் இன்றி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

ஆம்! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

ஐபில் தொடரில் மே 25ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டியின் இறுதி வாரத்தில் இங்கிலாந்து தொடருக்கான அணி குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு அறிவிக்கலாம். 

ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டுடன் இங்கிலாந்துக்கான 45 நாள் பயணத்தை இந்தியா தொடங்கும். அதைதொடர்ந்து, ஜுலை 2ம் தேதி பர்மிங்ஹாமில் இரண்டாவது போட்டியும், ஜுலை 10ம் தேதி லண்டனில் (லார்ட்ஸ்) மூன்றாவது போட்டியும், ஜுலை 23ம் தேதி மான்செஸ்டரில் நான்காவது போட்டியும், ஜுலை 31ம் தேதி கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி லண்டன் (கென்னிங்டன் ஓவல்) மைதானத்திலும் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
60 நாட்கள் வரை தந்தைக் கோழியின் பராமரிப்பில் இருக்கும் குஞ்சுகள்! எந்தப் பறவை?
Ind vs eng
logo
Kalki Online
kalkionline.com