வாய்ப்பு கிடைத்தும் சரியாக செயல்படாத பந்துவீச்சாளர்கள் எதற்கு? ரோஹித் காட்டம்!

Rohit Sharma.
Rohit Sharma.

வாய்ப்பு கிடைத்தும் சரியாக செயல்படாத பந்துவீச்சாளர்கள் எதற்கு? சாதகமான ஆடுகளத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் எப்படி சாதிப்பீர்கள் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காட்டமாக கேள்வி எழுப்பினார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு மறுமுனையிலிருந்து எந்தவிதமான ஆதரவும் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவான ஆடுகளத்தில் 400-க்கும் மேலான ரன்களை கொடுப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று விரக்தி நிறைந்த குரலில் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த்து. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்களும் எடுத்தது. ஆனால், ஆட்டத்தின் போக்கை மாற்றிய தென்னாப்பிரிக்க அணியினர் முதல் இன்னிங்ஸிலேயே 408 ரன்களை குவித்துவிட்டனர்.

ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் முகமது சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ண மூவரும் அதிக ரன்கள் கொடுத்து விக்கெட் எடுத்ததில் எந்த லாபமும் இல்லை.

தென்னாப்பிரிக்கா 400 ரன்கள் எடுக்க வாய்ப்பே இல்லை. ஆனால், நாம் அவர்களுக்கு கொடுத்துவிட்டோம். பும்ரா என்னும் ஒரு பந்துவீச்சாளரை மட்டுமே நாம் நம்பியிருக்க முடியாது. எஞ்சியுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களும் முழுத்திறமையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் ரோஹித்.

இந்திய பந்துவீச்சாளர்கள் முயற்சிக்காமல் இல்லை. ஆனால் பும்ரா ஒருவர் மட்டும் என்ன செய்ய முடியும் என்று ரோஹித் கேள்வி எழுப்பினார்.

பும்ரா தரமான பந்துவீச்சாளர் என்பது நமக்குத் தெரியும். அவருக்கு தேவையான ஆதரவு மறுமுனையிலிருந்து கிடைக்கவில்லை. மற்ற மூன்று பந்துவீச்சாளர்களும் தங்களால் முடிந்ததை செய்தார்கள் என்றாலும் எது நடக்க வேண்டுமோ அது நடக்கவில்லை.

இளம் பந்துவீச்சாளரான பிரசித் இதுவரை 12 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில்தான் பங்கேற்றிருக்கிறார். ஆனாலும் அவர் முதல் டெஸ்டில் எதிர்பார்த்த அளவு பந்துவீசவில்லை. 20 ஓவர்கள் வீசி 93 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார்.

பிரசித் கிருஷ்ணாவுக்கு சிவப்பு பந்துவீச்சு ஆட்டத்தில் போதிய அனுபவம் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்கள் ஏன் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றார்.

இதையும் படியுங்கள்:
பாக்ஸிங்க் டே டெஸ்ட் என்றால் என்ன?
Rohit Sharma.

வேகமாக ஓடி வருவதில் என்ன இருக்கிறது. சிந்தித்து செயல்பட்டு பந்து வீசினால் பலன் கிடைத்திருக்கும். எனக்கு டெஸ்ட் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லை என்று சொல்லி நழுவக்கூடாது.

இந்திய பந்து வீச்சாளர்களில் சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. சிலர் காயமடைந்து ஓய்விலிருந்து வருகின்றன. அந்த நிலையில் புதியவர்களான உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்தி உயர வேண்டும். சும்மா நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த நன்மையும் இல்லை. சிறந்த அணுகுமுறை இருந்தால்தான் முன்னேற முடியும் என்றார் ரோஹித்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com