பத்து ஆண்டுகளில் ஐந்து கோப்பைகள் - மும்பை இண்டியன்ஸின் கேப்டனாக முத்திரை பதித்த 'ரோகித் சர்மா'!

Rohith with Mi trophies
Rohith with Mi trophies

அதிவேகமான கிரிக்கெட் உலகில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மா, அழியாத முத்திரையை பதித்துள்ளார். 2013 ஆம் ஆண்டின் கடைசி கட்டத்தில் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து ஐந்து ஐ.பி.எல் பட்டங்களை வென்றது வரை ரோஹித்தின் பயணம் எந்தவிதத்திலும் குறைவானது அல்ல.

ரோஹித் தலைமையின் கீழ் அணி பெற்ற வெற்றிகள், சந்தித்த சவால்கள் பற்றிய ஒரு பார்வை இது. மும்பை இண்டியன்ஸின் புகழ்பெற்ற பயணத்தில் அவரது ஈடு இணையில்லாத பங்களிப்பைக் கண்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பிரமிப்பில் உள்ளனர்.

2013 ஐ.பி.எல் சீசனின் நடுப்பகுதியில் ரோஹித் சர்மா, மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார். அவரது பத்தாண்டு காலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி ஐந்துமுறை பட்டங்களை வென்றுள்ளது.

2013 ஆம் ஆண்டு ரோஹித் அணி கேப்டனாக இருந்த போது தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பதுபோல் தோன்றியது. முதல் போட்டியில் மும்பை இண்டியன் தோல்வி அடைந்த போதிலும் லீக் கட்டத்தில் அணி 2-வது இடத்தில் இருந்தது. அதன் பின் சி.எஸ்.கே. அணியை இறுதிப் போட்டியில் வென்று ஐ.பி.எல். பட்டத்தை கைப்பற்றியது.

ரோஹித் சர்மா, ஐ.பி.எல். போட்டிகளில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி-20 மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற வழிவகுத்தார். டி-20 போட்டிகள் பலவற்றில் தனது தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தினார்.

2015 ஆம் ஆண்டு மும்பை இண்டியன்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. அதன் பின் சுதாரித்துக் கொண்டு அடுத்துவந்த போட்டிகளில் வெற்றிபெற்றது. ஒரு கேப்டன் என்ற முறையில் ரோஹித் சிறப்பான பணியைச் செய்ததுடன் அணி வீரராகவும் திறமையை வெளிப்படுத்தினார். இதையடுத்து இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. அணியை மும்பை இண்டியன் அணி வென்றது.

2016 ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்களை தவறவிட்ட பிறகு, மும்பை இண்டியன்ஸ் அணி 2017 ஆம் ஆண்டு மீண்டு எழுந்தது. அத்துடன் இறுதிப் போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் ரோஹித் தலைமையில் மூன்றாவது முறையாக ஐ.பி.எல் பட்டத்தை கைப்பற்றியது.

இதையும் படியுங்கள்:
12 வயதில் வீட்டை விட்டு சென்று 23 வயதில் கோப்பையுடன் திரும்பிய வீராங்கனை... யார் இந்த ரேணுகா சிங் தாக்கூர்?
Rohith with Mi trophies

2018 ஆம் ஆண்டு ஏமாற்றம் அளித்தாலும், மும்பை இண்டியன்ஸ் அணி மீண்டும் எழுச்சிபெற்றது. சி.எஸ்.கே அணியை சவாலான நேரத்தில் இறுதிப் போட்டியில் சந்தித்த மும்பை இண்டியன்ஸ் அணி, ஹோஹித்தின் தந்திரமான ஆட்டத்தால் நான்காவது முறையாக ஐ.பி.எல் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

2020 கிரிக்கெட் சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், எம்.எஸ்.தோனிக்கு பிறகு ஐ.பி.எல் பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்த முதல் கேப்டன் ரோஹித் சர்மாதான். அந்த ஆண்டு இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் வென்றது.

ரோஹித் சர்மா, 158 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டனாகவும் இருந்துள்ளார்.

அவர் ஐ.பி.எல் போட்டிகளின் வரலாற்றில் 6,211 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3,986 ரன்கள் மும்பை இண்டியன்ஸ் கேப்டனாக எடுத்தது. அவரது தனித்திறமை, தந்திரமாக அணியை வழிநடத்திச் சென்றவிதம் அவருக்கு சிறந்த கேப்டன் என்ற பெயரை பெற்றுத்தந்தது. மும்பை இண்டியன்ஸின் ஐ.பி.எல் பயணத்தில் ரோஹித் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியுள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com