

கால்பந்து உலகின் முடி சூடா மன்னனாக இருப்பவர், போர்ச்சுகல் அணியை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். நேற்று அவருக்கு மிகவும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகே உள்ள, அழகிய கடலோர நகரமான கஸ்காய்ஸில் ரொனால்டோவிற்கும் , அவரது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்ற்கும் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. 41 வயதான கிறிஸ்டினா ரொனால்டோ , கடந்த 10 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் பிரபல மாடலான 32 வயதான ஜார்ஜினாவா காதலித்து வந்தார்.
2017 -ஆம் ஆண்டு ரொனால்டோ- ஜார்ஜினா இவர்களின் முதல் சந்திப்பு நடைபெற்றது. இவர்களிடையே தொடங்கிய காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள கூச்சி பேக்(Gucci Bag) விற்பனையகத்தில், விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தவர் ஜார்ஜினா. முதல் முறையாக இருவரும் அங்கு சந்தித்தபோது அவர்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட்டது.
ஜார்ஜினாவின் எளிமையான பழக்கவழக்கமும் அன்பும் ரொனால்டோவை மிகவும் கவர்ந்தது. பல வருடங்களாக இவர்களின் காதல் ஊரறிய வெளிப்படையாகவே தொடர்ந்தது. இவர்களின் காதல் பின்னர் லிவ்-இன் உறவாக மாறியது. இருவரும் இணைந்து திருமணம் செய்து கொள்ளாமலேயே 2 குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இந்த ஜோடிக்கு 2017-ஆம் ஆண்டு நவம்பரில், அலானா மார்டினா என்ற பெண் குழந்தை பிறந்தது, அதைதொடர்ந்து 2022 -ஆம் ஆண்டு பெல்லா எஸ்மெரால்டா என்ற மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஜார்ஜினாவிடம் காதல் வயப்படும் முன்னரே ரொனால்டோ வாடகைத் தாய் மூலம் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அதில் ரொனால்டோ ஜூனியர் என்ற மகனும் , மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். இந்த குழந்தைகளையும் தனது குழந்தைகளாக எண்ணி ஜார்ஜினா வளர்த்து வந்தார். நேற்று தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் இவர்களின் திருமணம், கிறிஸ்தவ முறைப்படி சட்டப்பூர்வமாக நடைபெற்றது.
ஜார்ஜினாவிற்கு முன்னர் ரொனால்டோ ஒரு சிலரை காதலித்து வந்தாலும் அது எதுவும் திருமண பந்தத்தில் இணையவில்லை. இரினா ஷேக் என்ற மாடலை 5 வருடங்களாக ரொனால்டோ காதலித்து வந்தார். ஆனால் , ரெனால்ட்டோவின் குடும்பத்திற்கும் இரினாவிற்கும் இடையில் சரியான புரிதல் இல்லாததால் இந்த காதல் பாதியில் தோல்வி அடைந்தது.
ஜார்ஜினா, ரொனால்டோவை காதலிக்கும் முன்னர் மிகவும் சாதாரணமான ஒரு மாடலாக இருந்தார். ஆனால், ரொனால்டோவின் காதல் அவருக்கு சர்வதேச அளவில் மிகவும் பிரபலத்தை கொடுத்தது. அதன் மூலம் மாடலிங் தொழிலிலும் அவர் பெரிய அளவில் சாதித்து புகழ்பெற்றிருந்தார்.
போர்ச்சுக்கல் அணியின் வீரராக இருந்தாலும், சௌதி அரேபியாவின் 'அல் நஸ்ர்' என்ற உள்ளூர் அணிக்காகவும் ரொனால்டோ கால்பந்து விளையாடி வருகிறார். அல் நஸ்ர் அணிக்காக விளையாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் காலங்களில், அவர் ஜார்ஜினாவுடன் ஒரே வீட்டில் தங்கியது அங்கு பெரிய சர்ச்சையை கிளப்பியது.
சௌதி அரேபியாவின் சட்டதிட்டங்களின்படி திருமணம் ஆகாத தம்பதியர்கள் ஒரே வீட்டில் தங்குவது சட்ட விரோதமாக கருதப்பட்டது. இது பற்றி ஏராளமான புகார்களும் எழுந்தது. ஆனாலும் சௌதி அரசு ரொனால்டோ ஜார்ஜினா இணைந்து தங்குவதற்கு அனுமதி வழங்கியது. தனது வாழ்வின் முக்கிய தருணமான திருமண செய்தியை இன்ஸ்டாகிராம் மூலமாக ரொனால்டோ வெளியுலகிற்கு அறிவித்தார். இந்த செய்தி அறிந்த ரொனால்டோவின் ரசிகர்கள் உலகமெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.