கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை நிச்சயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். எட்டு ஆண்டுகள் காதல் வாழ்க்கைக்குப் பிறகு, இந்த ஜோடி தங்களது உறவில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தில், அவரது கையில் மின்னும் ஒரு பிரமாண்டமான வைர மோதிரம் இடம்பெற்றுள்ளது.
2016-ஆம் ஆண்டு மாட்ரிட்டில் உள்ள ஒரு குஸ்ஸி கடையில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஜார்ஜினா அங்கு விற்பனை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அந்தச் சந்திப்பு பின்னர் காதலாக மாறியது. 2017-ஆம் ஆண்டு, தி பெஸ்ட் ஃபிஃபா ஃபுட்பால் விருதுகள் விழாவில் இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றினர்.
ரொனால்டோவுக்கும் ஜார்ஜினாவுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், ரொனால்டோவின் மூன்று குழந்தைகளையும் ஜார்ஜினா கவனித்து வருகிறார். 2022-ஆம் ஆண்டு, இரட்டை குழந்தைகளில் ஒரு மகனை இழந்த சோகத்தையும் இந்த ஜோடி எதிர்கொண்டது. இந்தச் சோகமான தருணத்திலும், இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளனர்.
ரொனால்டோ தனது காதலியிடம் திருமண கோரிக்கையை வைத்ததை உறுதி செய்யும் விதமாக, ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ தனக்கு பரிசளித்த மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ரொனால்டோ தனது காதலிக்கு பரிசளித்த நிச்சயதார்த்த மோதிரம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது சுமார் $2 மில்லியன் முதல் $5 மில்லியன் வரை மதிப்புள்ள ஒரு பெரிய ஓவல் வடிவ வைர மோதிரம் என்று கூறப்படுகிறது. இந்த மோதிரத்தின் மையத்தில் சுமார் 25-30 காரட் வைரம் உள்ளது. அதன் இருபுறமும் தலா ஒரு காரட் கொண்ட இரண்டு சிறிய வைரங்கள் உள்ளன. இந்த மோதிரத்தின் விலை இந்திய மதிப்பில் ₹16 கோடி முதல் ₹41 கோடி வரை இருக்கலாம் என நகை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த மோதிரம் மிக உயர்ந்த தரம் வாய்ந்த கொண்டது என்றும் கூறப்படுகிறது.