ஐபிஎல் 2026: ஜெய்ப்பூரில் ரன் மழை: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி மாஸ் வெற்றி..!

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
Delhi Capitals team
Delhi Capitals teamimage credit-indiatoday.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.

டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் 6-வது இடத்திற்கு முன்னேறும்.

தங்களது புயல்வேக பேட்டிங்கை தொடரும் ஆர்வத்தில் ராஜஸ்தானும், தோல்வியில் இருந்து மீண்டு எழுச்சி பெற டெல்லியும் வரிந்து கட்டுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் தலா 15 வெற்றிகள் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதன் மூலம் டெல்லி அணி 4-வது வெற்றியை பதிவு புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது.

logo
Kalki Online
kalkionline.com