ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்..!

ஜெய்பூரில் இன்று நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
Rajasthan Royals
Rajasthan Royalsimage credit-thestatesman.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஜெய்பூரில் இன்று நடக்கும் 64-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

4 வெற்றி, 8 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, நிதானமாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்து பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்தது.

logo
Kalki Online
kalkionline.com