

19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்டை நடத்துகின்றன.
ஆனால் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் டாஸ் போடப்பட்டதில் வெற்றி பெற்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையால் 11 ஓவர்களாக குறைத்து போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.
அடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் போட்டியில் இறங்கிய மும்பை அணி கடுமையாக போராடிய போதிலும் 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் தான் அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.