#BREAKING ஐபிஎல் 2026: வெற்றி நடை போடும் ராஜஸ்தான்! பெங்களூருவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை...!

கவுகாத்தியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
RR vs RCB
RR vs RCBimage credit-News18 CricketNext @cricketnext
Updated on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இவ்விரு அணிகளும் 3 வெற்றிகளை பதிவு செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கவுகாத்தியில் மழை பெய்ததால் சற்று தாமதமாக டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்ய, அதனைதொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் ராஜஸ்தான் அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com