#BREAKING ஐபிஎல் 2026: 228 ரன் குவித்தும் கைநழுவிய வெற்றி: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்..!

ஜெய்பூரில் இன்று நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி.
Sunrisers Hyderabad team
Sunrisers Hyderabad team
Updated on

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று ஜெய்பூரில் நடக்கும் மற்றொரு 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. அதேசமயம் ஐதராபாத் அணி 7 ஆட்டங்களில் ஆடி 4ல் வெற்றி 3-ல் தோல்வி கண்டுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 9-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் 3வது இடத்திலும், ஐதராபாத் அணி 4வது இடத்திலும் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ய அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் இறுதி அதிரடியாக விளையாடி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com