வேட்டி சேலையில் ஜொலிக்கும் ருதுராஜ், உட்கர்ஷா! மனம் நெகிழ்ந்து பகிர்ந்த ருதுராஜ்!

வேட்டி சேலையில் ஜொலிக்கும் ருதுராஜ், உட்கர்ஷா! மனம் நெகிழ்ந்து பகிர்ந்த ருதுராஜ்!
Updated on

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ருதுராஜ் கெய்க்வாய்ட் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராவார். இவர் ஐபிஎல் 2023 சீசன் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கி 590 ரன்களைக் குவித்து அனைவரையும் வியக்கவைத்தார்.

இந்நிலையில், இவர் கடந்த 03ம் தேதி, தனது நீண்ட நாள் காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் செய்தார். இவருடைய மனைவி உட்கர்ஷா பவார், மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனை ஆவார். ஏராளமான போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர், ஃபிட்னெஸ் தொடர்பான படிப்பை படித்து வருவதால், கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருதுராஜ் மற்றும் உட்கர்ஷா இருவரும் வேட்டி, சேலையில் இருக்கும் நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்து, மனம் நெகிழ்ந்தபடி ஒரு பதிவையும் போட்டுளளார். அதில்,

சென்னை மக்களும், சிஎஸ்கே அணியும் என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர் உட்கர்ஷா. அதனால்தான் மகாராஷ்டிர முறைப்படி எங்கள் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தும், தென்னிந்திய கலாச்சார முறைப்படிதான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்தவர் உட்கர்ஷா. இது உண்மையிலேயே எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறியது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com