டி20 போட்டிகளில் வரலாற்று சாதன படைத்த மூன்று கிரிக்கெட் வீராங்கனைகள்..!

Fanny Utagushimaninde
Fanny UtagushimanindeSource:BBC
Updated on

2026 மார்ச் 19 ம் தேதி டி20 தொடரில், ருவாண்டா மற்றும் நைஜீரியா மகளிர் அணி மோதியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ருவாண்டா அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நைஜீரியா மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 88 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.

இதன் மூலம், 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது ருவாண்டா மகளிர் அணி. இந்த போட்டியில், 65 பந்துகளில் 111 ஓட்டங்கள் குவித்த ருவாண்டா விக்கெட் கீப்பர் ஃபன்னி உடகுஷிமானின்டே (Fanny Utagushimaninde) இள வயதில் சர்வதேச T20 போட்டியில் சதமடித்த கிரிக்கெட்டர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

உகாண்டா வீராங்கனை புரோஸ்கோவியா அலாகோ, 16 வயது மற்றும் 233 நாட்களில் சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.15 வயது மற்றும் 223 நாட்களில், அன்மை போட்டியில் சதமடித்து ஃபன்னி உடகுஷிமானின்டே அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஆண்கள் கிரிக்கெட்டில், 18 வயது மற்றும் 280 நாட்களில் சதம் அடித்த பிரான்ஸ் வீரர் குஸ்டாவ் மெக்கியோன், மிக இளைய வீரர் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார்.மேலும், சர்வதேச T20 போட்டியில் அறிமுக போட்டியில் ஆட்டமிழக்காமல் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.அறிமுக சர்வதேச T20 போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை கரேன் ரோல்டன் ஆட்டமிழக்காமல் எடுத்திருந்த 96 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

T20 கிரிக்கெட்டில் ஆண்கள் கூட செய்யாத சாதனையை படைத்த நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் .

2026 மார்ச் தென் ஆப்பிரிக்கா சென்ற நியூசிலாந்து மகளிர் அணி, 5 T20 மற்றும் 3 ODI கொண்ட தொடரில் விளையாடிது.மார்ச் 22 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் T20 தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் மூலம் நியூசிலாந்து அணித்தலைவி அமெலியா கெர் (Amelia Kerr) சர்வதேச T20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 31 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் 30+ ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 10 போட்டிகளில் 30+ ஓட்டங்களை எடுத்துள்ளார் அமெலியா கெர்.முன்னதாக இலங்கையின் சமரி அதபத்து மற்றும் ருமேனியாவின் ரெபேக்கா பிளேக் 9 போட்டிகளில் 30+ ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

ஆண்கள் T20 கிரிக்கெட்டில், ரோஹித் சர்மா , முகமது ரிஸ்வான், அபிஷேக் சர்மா மற்றும் ஹிரிஸ்டோ லாகோவ் ஆகியோர் 7 போட்டிகளில் 30+ ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.ஏற்கனவே இளவயதில் இரட்டை சதம் அடித்த வீராங்கனை, ODI கிரிக்கெட்டில் அதிகபட்ச ஓட்டம் குவித்த வீராங்கனை ஆகிய சாதனைகளை அமெலியா கெர் தன் வசம் வைத்துள்ளார்.

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரோ அல்லது வீராங்கனையோ செய்யாத ஒரு மாபெரும் சாதனையை பிரேசில் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லாரா கார்டோசோ (Laura Cardoso)செய்து காட்டியுள்ளார். ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

போட்ஸ்வானாவில் உள்ள கபோரோன் மைதானத்தில் 2026 ஏப்ரல் 9 அன்று பிரேசில் மற்றும் லெசோத்தோ மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி-20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் என்ற சிறப்பான ஸ்கோரை பதிவு செய்தது.இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி லெசோத்தோ அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணிக்கு 21 வயதான பிரேசில் வேகப்பந்து வீச்சாளர் லாரா கார்டோசோ சிம்ம சொப்பனமாக மாறினார். தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக்கட்டு போல சரித்தார்.

அவர் மொத்தம் 3 ஓவர்கள் மட்டுமே வீசி வெறும் 4 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் லெசோத்தோ அணி வெறும் 13 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை லாரா கார்டோசோ தன் வசப்படுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com