நடுவர்களிடம் புகார்.. போலார்டு மீது எழும் விமர்சனம்.. நடந்தது என்ன?

SA 20
SA 20Imge credit: India today
Published on

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போல் தென்னாப்பிரிக்காவிலும் SA 20 என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் போலார்டு செய்த சில செய்களால் கடுப்பான எதிரணி வீரர் டூ ப்ளசிஸ், நடுவரிடம் அவரைப் பற்றி புகார் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதனைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்களும் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் எப்படி மும்பை அணி, சென்னை அணியோ, அதேபோல் தென்னாப்பிரிக்காவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம் ஐ கேப் டவுன் அணிகள். பொதுவாக இந்த அணிகள் நேருக்கு நேர் மோதும்போது விறுவிறுப்புக்கும் ரசிகர்களின் உற்சாகத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இருக்காது. அந்தவகையில் நேற்று இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இரு அணிகளும் சமமான பலத்துடன் வேலையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் மழை வந்து தடுத்துவிட்டது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த எம் ஐ கேப் டவுன் அணி 8 ஓவர் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு 98 ரன்கள் இலக்காக அமைந்தது. மீண்டும் மழைப் பெய்ய தொடங்கியதால் சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடத் தொடங்கியது. குறைந்தப்பட்சம் அந்த அணி 5 ஓவர்களாவது விளையாட வேண்டும். ஆகையால் ஓப்பனராக களமிறங்கிய டூ ப்ளசிஸ் மற்றும் டூ ப்ளூய்யும் வேக வேகமாக விளையாடியதோடு ரன்களும் குவித்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய எதிரணி வீரர்கள் சில யுக்திகளைக் கையாண்டார்கள். எம் ஐ அணிக்காக பந்து வீசிய போலார்டு பந்து வீசும் போது நேரத்தைக் கடத்தியது மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கை சரி செய்ய நேரத்தை வேண்டுமென்றே கடத்தி வந்தார்.

இதையும் படியுங்கள்:
Alpenglow நிகழ்வு: இந்து குஷ் மலையில் நடந்த அதிசயம்.. வைரலாகும் NASA-வின் புகைப்படங்கள்! 
SA 20

இதனையடுத்து பந்து வீச தொடங்கிய ரபாடா வேண்டுமென்றே பாதி தூரம் வந்தப் பிறகு மீண்டும் சென்று பந்து வீசினார். அதேபோல் போலார்டு பந்து வீசத் தயாராகிவிட்டு சாம் கரனை அழைத்து பந்து வீச சொன்னார். இதனால் கோபமான டூ ப்ளசிஸ் நடுவர்களிடம் சென்று புகார் அளித்தார். மழை நிறைய பிடித்தால் ஐந்து ஓவர்  கூட முடிக்க முடியாது என்பதால் அவர்கள் வேண்டுமென்றே தாமதிக்கிறார்கள் என்று புகார் அளித்தார்.

இதற்கு நடுவிலும் டூ ப்ளசி அபாரமாக விளையாடி 5.4வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டார்.

ஆயினும் எம் ஐ யின் இந்த செயல்களை ரசிகர்கள் எதிர்த்து வருகின்றனர். மேலும் இதற்கான நடவடிக்கையை எடுக்கக் கூறி தங்கள் கருத்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com