இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி: 5 விக்கெட்டுகளை சாய்த்து வரலாறு படைத்தார் அர்ஷதீப்!

Ind Vs SA 1st ODI
Ind Vs SA 1st ODI

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். தமது சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க முன்னிலை வீர்ர்களை நிலைகுலையவைத்தார்.

ஜோஹன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளரான அர்ஷதீப் பரபரப்பாக பந்துவீசி 10 ஓவர்கள் பந்துவீசி, 37 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்த நான்காவது பந்துவீச்சாளர் அர்ஷதீப். இதற்கு முன் யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளதுள்ளார். தற்போது அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற போட்டியில் அர்ஷ்தீப் சிங் 37 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு, சென்சூரியனில் நடைபெற்ற போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2023 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ரவீந்திர ஜடேஜா 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு நைரோபியில் நடைபெற்ற போட்டியில் சுநீல் ஜோஷி 5 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளையும், அவேஷ்கான் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்பிரிக்கா, பின்னர் 73 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது. கடைசியில் தட்டுத்தடுமாறி 100 ரன்களைக் கடந்தது.

இதையும் படியுங்கள்:
இந்திய மக்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள் எவை தெரியுமா?
Ind Vs SA 1st ODI

தென்னாப்பிரிக்க அணியில் ஆன்டிலே பெஹ்லுக்வாயோ அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரும் அர்ஷதீப் பந்துவீச்சில் LBW ஆகி அவுட்டானார்.

இதற்கு முன் அர்ஷதீப் சிங் 3 ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்ற போதிலும் விக்கெட் எதையும் எடுக்கவில்லை. 3 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர், பரபரப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com