

கிரிக்கெட் வரலாற்றில் புகழ் பெற்ற இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற்றன. அவற்றை பற்றி விரிவாக காண்போம்.
1. இங்கிலாந்து vs மேற்கு இந்தியத் தீவுகள் (1930)
மைதானம்: சபீனா பார்க், கிங்ஸ்டன், ஜமைக்கா.
தேதி: 03 - 12 ஏப்ரல், 1930.
அந்த கால கட்டத்தில் இவ்வளவு நாட்கள் தான் டெஸ்ட் நடைப் பெறும் என்ற நிலைபாடு கிடையாது.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜார்ஜ் குண் மற்றும் ஆண்டி சந்தம் சிறப்பாக விளையாடினார்கள். முதல் விக்கெட்டிற்கு 173 ரன்கள் சேர்த்தனர். ஜார்ஜ் குண் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.
அடுத்த வீரர் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆகும் பொழுது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 321 / 2 என்று காட்டியது.
துவக்க வீரர் ஆண்டி சந்தம் சதம் எடுத்து முதல் நாள் முடிவில் 151* ரன்கள் எடுத்து இருந்தார்.இரண்டாம் நாள் அவர் இரட்டை சதம் பூர்த்தி செய்தார்.இடையில் பாப் வ்யட்ட 58 ரன்களுக்கு அவுட் ஆனார்.ஹென்றேன் 61 ரன்கள் எடுத்தார்.
ஆண்டி சந்தம் தனது பேட்டிங்கை அருமையாக தொடர்ந்துக் கொண்டு இருந்தார்.அடுத்து ஆட வந்த விக்கெட் கீப்பர் லீஸ் ஆம்ஸ் தனது சதத்தை எடுத்தார்.அவர் நான்காவதாக அவுட் ஆகும் பொழுது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 667/4.174 பந்துக்கள் எதிர் கொண்ட லீஸ் ஆம்ஸ் 17 பவுண்டரிகள் உடன் எடுத்த ரன்கள் 149.
ஜாக் ஓ கனார் என்ற வீரருடன் ஜோடி சேர்ந்து தனது பேட்டிங்கை தொடர்ந்தார் துவக்க வீரர் ஆண்டி சந்தம். டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் அது வரையில் சதங்கள் மற்றும் இரட்டை சதங்களையே கண்டு இருந்தது.
முதல் முறையாக முச்சதம் எடுத்த பெருமை இங்கிலாந்து வீரர் ஆண்டி சந்தம் அவர்களை சென்றடைந்தது.
ஆம். இந்த டெஸ்டில் அவர் முச்சதம் பதிவு செய்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஸ்கோர் 700 / 4.
ஆண்டி சந்தம் 309*
ஜாக் ஓ கனார் 22*
அடுத்த நாள் ஆட்டத்தில் 5 வீரராக ஸ்கோர் 720 இருக்கும் பொழுது அவுட் ஆனார் ஆண்டி சந்தம்.இவர் எடுத்த ரன்கள் 325.
அவர் எதிர் கொண்ட பந்துக்கள் 640. பவுண்டரிகள் 28.இவர் ஆடியுள்ள முதல் தர ஆட்டங்களின் இன்னிங்ஸ்கள் எண்ணிக்கை 1000.
இந்த டெஸ்டில் இவர் கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தின் இந்த முதல் முச்சதத்தை ( First ever triple century ) பதிவு செய்த பொழுது இவரது வயது 40.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 849 ரன்கள் குவித்தனர்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி பவுலர் டொம்மி ஸ்காட் 266 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி முதல் இன்னிங்சில் ஆல் அவுட் 286.
துவக்க வீரர் கேப்டன் கார்ல் நுனீஸ் 8 பவுண்டரிகளுடன் எடுத்த ரன்கள் 66.சார்லஸ் பசைலைக்கு 6 பவுண்டரிகளுடன் எடுத்த ரன்கள் 44.இங்கிலாந்து பவுலர்கள் ஹைக் மற்றும் அஸ்டில் தலா 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 272 ரன்களுடன் டிக்ளர் செய்தனர்.
ஹென்றேன் 55 ரன்கள்
ஆண்டி சந்தம் 50 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர் டொம்மி ஸ்காட் இந்த முறை 4 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
836 ரன்கள் என்ற இலக்குடன் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் துவங்கினர் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள்.
இங்கிலாந்து அணி வென்று விடும் என்று எதிர் பார்த்த நிலையில்,நிலைமை வேறு மாதிரி மாறியது.கேப்டன் நுனீஸ் மற்றும் ஜார்ஜ் ஹெடிலே இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப் படுத்தினர்.
இருவரும் பார்ட்னர்ஷிப் சேர்ந்து 227 ரன்கள் சேர்த்தனர் அணிக்கு.ஆறாவது நாள் ஆட்டத்தில் தனது சதம் எடுத்தார் ஜார்ஜ் ஹெடிலே.ஏழாவது நாள் 92 ரன்கள் (11 பவுண்டரிகள்) எடுத்து கேப்டன் கார்ல் நுனீஸ் அவுட் ஆனார்.ஜார்ஜ் ஹெடிலே தனது இரட்டை சதத்தை எடுத்தார்.385 பந்துக்கள் எதிர் கொண்ட இவர் எடுத்த ரன்கள் 223 ( பவுண்டரிகள் 28 )
மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் ஸ்கோர் 408 / 5 என்று இருக்கும் பொழுது இரண்டு அணிகளும் ஒப்புக் கொண்ட படி டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.இந்த டெஸ்டின் ஒரே ஒரு சிக்சரை அடித்தவர் இங்கிலாந்து வீரர் ஹெட்றேன்.
இந்த டெஸ்டில் பதிவான சாதனைகள்:
சதம்: லீஸ் ஆம்ஸ் (149 ரன்கள்)
இரட்டைச் சதம்: ஜார்ஜ் ஹெடிலே (223 ரன்கள்)
முச்சதம்: ஆண்டி சந்தம் (325 ரன்கள்)
2. மேற்கு இந்தியத் தீவுகள் vs பாகிஸ்தான் (1958)
மைதானம்: அதே சபீனா பார்க், கிங்ஸ்டன், ஜமைக்கா.
தேதி: 26 பிப்ரவரி - 04 மார்ச், 1958.
இந்த முறை தொடரின் மூன்றாவது டெஸ்ட்.அணிகள் பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுக்கள்.
முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது.துவக்க வீரர் இம்டியாஸ் அஹ்மத் மற்றும் சயித் அஹ்மத் ஜோடி சிறப்பாக ஆடினார்கள்.இந்த ஜோடி சேர்த்த ரன்கள் 118.சயித் அஹ்மத் 52 ரன்கள்.வாலீஸ் மதியஸ் 77 ரன்கள்.14 பவுண்டரிகள் உடன் 122 ரன்கள் எடுத்தார் இம்டியாஸ் அஹ்மத்.பாகிஸ்தான் அணி ஆல் அவுட் 328 ரன்கள்.
அடுத்து ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் கான்ராட் ஹண்ட் மற்றும் ரோகன் கன்ஹாய் ஜோடி சேர்ந்தனர். பின்னர் 21 வயதான இளம் வீரர் கேரி சோபர்ஸ், கான்ராட் ஹண்ட் உடன் இணைந்தார். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த 21 வயதான கேரி சோபர்ஸ் கான்ராட் ஹண்ட் உடன் ஜோடி சேர்ந்தார். மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் இரண்டாம் நாள் முடிவில் ஸ்கோர் 147 / 1
கான்ராட் ஹண்ட் 100*
கேரி சோபர்ஸ் 20*
இருவரும் மூன்றாம் நாள் முழுவதும் ஆடினார்கள்.
இருவரும் தங்கள் இரட்டை சதங்களை எடுத்தனர். அன்று
முடிவில் அணி ஸ்கோர் 504 / 1
கான்ராட் ஹண்ட் 242*
கேரி சோபர்ஸ் 228*
நான்காம் நாள் கான்ராட் ஹண்ட் 260 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.இவர் அடித்தது 28 பவுண்டரிகள், 1 சிக்ஸர்.
கேரி சோபர்ஸ் தனது முச்சதத்தை பூர்த்தி செய்து தொடர்ந்து ஆடினார்.இவருடன் சேர்ந்து ஆடிய எவெற்டன் வீக்ஸ் 39 ரன்கள் எடுத்தார்.பிறகு ஜோடி சேர்ந்த கிளைதே வால்காட் 88* எடுத்தார்.
கேரி சோபர்ஸ் அன்றைய கால கட்டதில் தனி வீரரின் அதிக பட்ச உலக ரிகார்டாக திகழ்ந்த இங்கிலாந்து வீரர் லென் ஹட்டனின் 20 வது வருட சாதனையை கடந்து முறியடித்தார். லென் ஹட்டன் எடுத்து இருந்த ரன்கள் 364.
கேரி சோபர்ஸ் ஸ்கோர் 365* என்று இருந்த தருணத்தில் மேற்கு இந்திய தீவுக்கள் கேப்டன் அலெக்சாண்டர் அவர்கள் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்து 790 / 3 டிக்ளர் செய்தார்.
அந்த டெஸ்டில் உலக ரிக்கார்டு ஏற்படுத்திய கேரி சோபர்ஸ் 614 நிமிடங்கள் பேட்டிங் விளையாடினார். இவரது ரன்களின் விவரங்கள்.
ஒரு 5, 38 பவுண்டரிகள், 6 மூன்று ரன்கள், 30 இரண்டு ரன்கள் மற்றும் 130 ஒரு ரன்கள் ஆகும்..
சோபர்ஸ் அவர்களின் ஆட்டத்தால் மகிழ்ந்த 20000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குதித்து ஓடியதால் அன்றைய ஆட்டம் தொடர முடியவில்லை.சில முன்னணி பவுலர்கள் காயங்கள் காரணத்தால் பவுலிங் தொடர்ந்து வீச முடியவில்லை, பாகிஸ்தான்
அணிக்கு.அதனால் பாசல் முஹம்மது அதிக பட்சமாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டார்.
இவரது பவுலிங் 85.2 ஓவர்கள் 20 மெய்டன் 247 ரன்கள் 2 விக்கெட்டுக்கள் 54 ஓவர்கள் வீசிய கான் முஹம்மது 259 ரன்கள் விட்டு கொடுத்தார்.37 ஓவர்கள் வீசிய அப்துல் கர்தார் விட்டுக் கொடுத்த ரன்கள் 141.இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி எடுத்த ரன்கள் 288.நசிம் உல் கானி, மொஹமூட் ஹுசைன் காயம் காரணமாக விளையாடவில்லை.
இந்த தொடரில் முதல் டெஸ்டில் 337 ரன்கள் எடுத்து அசத்திய துவக்க பாகிஸ்தான் வீரர் ஹனிப் முகமது இந்த குறிப்பிட்ட 3 வது டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்கபவில்லை. அவர் எடுத்த ரன்கள் 3, 13.ஆனால் அவர் சகோதரர் வாசிர் முகமது 17 பவுண்டரிகள் உதவியுடன் 106 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் அப்துல் கர்தார் எடுத்த ரன்கள் 57 மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஒரு இன்னிங்ஸ் 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தனர்.
இந்த டெஸ்டில் பதிவான சாதனைகள்:
சதம்: இம்டியாஸ் அஹ்மத் (122), வாசிர் முகமது (106)
இரட்டைச் சதம்: கான்ராட் ஹண்ட் (260)
முச்சதம்: கேரி சோபர்ஸ் (365*)