மூன்று நூற்றாண்டுகள்; மூன்று டெஸ்ட் போட்டிகள்; ஒரு வியக்கத்தக்க ஒற்றுமை!

test cricket unique history
test cricket unique historyimage source: crictracker
Published on

கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் சில அபூர்வ நிகழ்வுகளும் நடைபெறுவதுண்டு.அப்படிப்பட்ட நிகழ்வு இந்த மூன்று டெஸ்டுக்களில் மட்டும் நடைப்பெற்றுள்ளது ஒரு அரிய ஒன்றாக கருதப்படுகின்றது.அந்த டெஸ்டுக்கள் குறித்தும் அந்த டெஸ்டுக்களில் நடைப் பெற்றுள்ள சிறப்பு ரிக்கார்ட்ஸ் பற்றியும் இங்கு காண்போம்.

இந்த மூன்று போட்டிகளின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இவை மூன்றும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் நடைபெற்றவையாகும்.

1. 19-ஆம் நூற்றாண்டு: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (1884)

இடம்: ஓவல் மைதானம் (ஆகஸ்ட் 11 - 13, 1884)

ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து அணிகள்ஓவல் மைதானத்தில் விளையாடிய தொடரின் மூன்றாவது டெஸ்ட்.அந்த கால கட்டத்தின் நியமம் படி டிக்ளரேஷன் செய்ய முடியாததால் முழு இன்னிங்சும் ஆடப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 

551 ரன்களுக்கு ஆல் அவுட்.இந்த டெஸ்ட் 4 சதங்களை கண்டது. அதில் 3 சதங்கள் ஆஸ்திரேலிய வீரர்களால் பதிவு செய்யப்பட்டன

கேப்டன் பில்லி முர்டோச்  211  ரன்கள்

( எதிர் கொண்ட பந்துக்கள் 525. பவுண்டரிகள் 24 )

பெர்சி மக்டொன்னேல்  103  ரன்கள்

( எதிர் கொண்ட பந்துக்கள் 168. பவுண்டரிகள் 14 )

டப்  ஸ்கோட் 102 ரன்கள்

( எதிர் கொண்ட பந்துக்கள் 216.  பவுண்டரிகள் 15 )

கேப்டன் பில்லி முர்டோச் தான் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை  சதம் எடுத்து சாதனை புரிந்தவர் ஆவார்.

இது ஒரு ரிக்கார்ட்.இங்கிலாந்து அணியின் 11 வீரர்களும் பவுலிங் செய்தனர்.டெஸ்ட் வரலாற்றில் இப்படி ஒரு அணியின் 11 வீரர்களும் பந்து வீசியது இதுவே முதல் முறையாகும்.விக்கெட் கீப்பர் ஆல்பிரெட் லைட்டல்டன் பந்து வீசியபோது, புகழ்பெற்ற டபிள்யூ. ஜி. கிரேஸ் விக்கெட் கீப்பிங் செய்தார். ஆல்பிரெட் லைட்டல்டன் சிறப்பாகப் பந்து வீசி 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

12   ஓவர்கள்   5   மெய்டன் 

19   ரன்கள்    4   விக்கெட்டுக்கள்

இங்கிலாந்து அணி 346 ரன்கள் எடுத்தனர்.

வால்டர் ரீட்  117 ரன்கள் ( எதிர் கொண்ட பந்துக்கள் 155 பவுண்டரிகள் 20 )

ஆஸ்திரேலிய பவுலர் ஜோய் பல்மர் எடுத்த விக்கெட்டுக்கள்  4, பால்லோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆட துவங்கியது இங்கிலாந்து அணி, ஸ்கோர்  85 / 2  இருக்கும் பொழுது டெஸ்ட் மேட்ச் டிரா ஆயிற்று.இந்த டெஸ்ட் 19-வது நூற்றாண்டில் நடைப் பெற்றது.

2. 20-ம் நூற்றாண்டு: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா (1980)

இடம்: பைசாலாபாத் (மார்ச் 06 - 11, 1980)

சுற்றுப்பயணம் மேற் கொண்ட ஆஸ்திரேலிய அணி மற்றும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நடைப் பெற்ற தொடரின் இரண்டாவது டெஸ்ட்.பைசாலாபாத் மைதானத்தில் நடைப் பெற்றது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 617 ரன்கள் எடுத்தது. இந்த டெஸ்டில் மொத்தம் 4 சதங்கள்.ஒவ்வொரு அணியிலும் ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதம்.

ஆஸ்திரேலிய  அணி கேப்டன் கிரேக் சப்பெல் 235  ரன்கள்

( எதிர் கொண்ட பந்துக்கள் 363. பவுண்டரிகள் 21 )

கிரஹாம் யல்லோப் 172 ரன்கள்

( எதிர் கொண்ட பந்துக் கள் 447.  பவுண்டரிகள் 19 )

கிம்  ஹுஹெஸ் 88 ரன்கள்

பாகிஸ்தான் வீரர்கள் துசீப் அஹ்மத் மற்றும் வாசிம் ராஜா தலா 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி ஸ்கோர் - 382/2 என்று இருக்கும் பொழுது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவு பெற்றது.

விக்கெட் கீப்பர் டஸ்லிம் ஆரிப் துவக்க வீரராக களம் இறங்கி இரட்டை சதம் எடுத்தார்.

210*   நாட் அவுட்  ரன்கள்

(எதிர் கொண்ட பந்துக்கள் 379. பவுண்டரிகள் 20)

இது இவரது ஒரே ஒரு டெஸ்ட் சதம் ஆகும்.

கேப்டன் ஜவேட்  மியாண்டாட் 106*நாட் அவுட்  ரன்கள்.

(எதிர் கொண்ட பந்துக்கள் 187 பவுண்டரிகள் 10,சிக்ஸர் 1)

ஆஸ்திரேலிய அணியின் 11 வீரர்களும் பந்துக்கள் வீசினார்கள்.இந்த நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இரண்டாவது முறையாகும்.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் பவுலிங் செய்த பொழுது அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்தவர் கேப்டன் கிரேக் சப்பெல்.இவர் ராட் மார்ஷ் வீசிய பந்தில் வந்த கேட்சை பிடிக்க தவறிவிட்டார்.இந்த டெஸ்டில் மொத்தம் 12 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 999ரன்கள் சேர்க்கபட்டது.இந்த டெஸ்ட் 20வது நூற்றாண்டில் நடைப்பெற்றது.

3. 21-ஆம் நூற்றாண்டு: மேற்கிந்தியத் தீவுகள் vs இந்தியா (2002)

இடம்: செயிண்ட் ஜான்ஸ், ஆன்டிகுவா (மே 10 - 14, 2002)

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தொடரின் 4-வது டெஸ்டை செய்யிண்ட் ஜான்ஸ் ஆண்டிகுஆ மைதானத்தில் விளையாடியது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 513 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

வி வி எஸ் லட்சுமண் 130  ரன்கள்

(எதிர் கொண்ட பந்துக்கள் 244.பவுண்டரிகள் 14)

விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா 115*நாட் அவுட்  ரன்கள்

(எதிர் கொண்ட பந்துக்கள் 284.பவுண்டரிகள் 12)

வாசிம் ஜாபர்  86 ரன்கள்

(எதிர் கொண்ட பந்துக்கள் 180.பவுண்டரிகள் 14)

ராகுல் திராவிட்  91 ரன்கள் 

(எதிர் கொண்ட பந்துக்கள் 291.பவுண்டரிகள் 12)

கேப்டன் கங்குலி 45 ரன்கள்

(எதிர் கொண்ட பந்துக்கள் 101.பவுண்டரிகள் 04  

சிக்ஸர் 1)

மேற்கு இந்திய தீவுக்கள் அணி பவுலர்கள்  டில்லோன், கபி, காலின்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டிங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மூன்று வீரர்கள் சதங்கள் எடுத்தனர். அதில் இருவரும் ஒரே மாதிரி  தலா  136  ரன்கள் குவித்தனர்.இவர்கள் அணி விக்கெட் கீப்பரும் சதம் எடுத்தார்.

இரண்டு அணி விக்கெட் கீப்பர்களும் ஒரே டெஸ்டில் சதங்கள் குவித்தது டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் முறையாக இந்த நிகழ்வு நடந்தது. இது ஒரு ரிகார்டு.

கேப்டன்  கார்ல் ஹூப்பர் 136 ரன்கள்

(எதிர் கொண்ட பந்துக்கள் 278. பவுண்டரிகள் 13 சிக்ஸர்கள் 3 )

ஷிவ்நரினே  சந்தர்பால்  136*  நாட்  அவுட் ரன்கள்

(எதிர் கொண்ட பந்துககள் 510.பவுண்டரிகள் 17)

சந்தர்பால் நின்று நிதானமாக நீண்ட நேரம் ஆடி 136 ரன்கள் அணிக்கு சேர்த்தார்.

ஹிண்ட்ஸ்  65 ரன்கள்

சார்வான்  51 ரன்கள்

மேற்கு இந்திய தீவுக்கள் அணி 9  விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 629 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தனர்.ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்திய அணியின் வீரர்கள் ஜாஹீர்கான், சச்சின் டெண்டுல்கர்,வாசிம் ஜாபர் தலா 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர். இந்திய அணியின் 11வீரர்களும் பவுலிங் செய்தனர்.இந்த நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் மூன்றாவது முறையாகும்.இதுவும் ஒரு ரிகார்டு.

விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா பவுலிங் செய்யும் தருணத்தில் ராகுல் திராவிட் விக்கெட் கீப்பிங் செய்தார்.இந்த மூன்று டெஸ்ட்  மேட்ச்சுக்களும்  டிராவில் முடிந்தன.

அதை விட முக்கியமான ஒற்றுமை இந்த மூன்று டெஸ்டுக்களில் மட்டும் தான் ஒரு அணியின் 11 வீரர்களும் ( 1884  இங்கிலாந்து, 1980  ஆஸ்திரேலியா, 2002  இந்தியா)  ஒரு இன்னிங்சில் பவுலிங் செய்து சாதனை புரிந்தனர்.இது முக்கியமான ஒற்றுமையாகும்.  அரிய நிகழ்வும் ஆகும்.இந்த டெஸ்ட் 21 வது  நூற்றாண்டில்  நடைப் பெற்றது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய 5 தவறான தீர்ப்புகள்... அம்பயர்களின் தில்லுமுல்லு அம்பலம்!
test cricket unique history

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com