காஷ்மீர் சாலையில் சச்சினின் ஆட்டம்! சமூக வலைதளங்களில் வைரல்!

Sachin's playing on Kashmir Road
Sachin's playing on Kashmir Road

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் காஷ்மீரில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு சாலையில் இளைஞர்களோடு இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் ஜாம்பவானாக சச்சின்:

இந்தியாவைப் பொறுத்தவரையில் மற்ற விளையாட்டுகளோடு ஒப்பிடுகையில் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவமும் ஆரவாரமும் கூடுதலாக இருப்பது தெரிந்த விஷயம் தானே! அந்த வகையில் ஒரு சில கிரிக்கெட் வீரர்களையும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு ரசிகர்கள் அதிகமாக கொண்டாடும் மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர் தான் சச்சின் டென்டுல்கர். பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் களத்தை ஆண்ட இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் சச்சின் கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் ‘லெஜண்ட்ஸ்’ கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

பேட் தொழிலாளர்களுக்கு சச்சினின் சர்ப்ரைஸ்:

இந்தியாவிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களுள் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது ஜம்மு காஷ்மீர். முழுவதுமாக பனி சூழ்ந்து குளிர்காற்று வீசும் ஒரு குளிர்ச்சியான இடமாகும். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பயணித்தபோது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் சச்சின். அதில் “பூமியில் இருக்கும் சொர்க்கமான காஷ்மீரை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் வீடியோ பதிவில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சச்சின் டென்டுல்கர் இரண்டு நாட்களுக்கு முன்பாக காஷ்மீர் சாலையில் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த கிரிக்கெட் பேட்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று சந்தித்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அப்பொழுது அவர் “காஷ்மீர் வில்லோவில் தான் தனது முதல் பேட் தயாரானதாகவும், சகோதரி சிறுவயதில் அளித்த பேட்டும் காஷ்மீர் வில்லோவில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது” என்றும் கூறி இருந்தார். மேலும் பேட் தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து கலந்துரையாடிய சச்சினின் நகைச்சுவை மிகுந்த பேச்சானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், காஷ்மீரில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று சச்சின் வழிபட்டார்.

இதையும் படியுங்கள்:
5.38 கோடிக்கு வீடு வாங்கிய இளம் வீரர் ஜெய்ஸ்வால்.. இரட்டைசதம் கொடுத்த இருமடங்கு வளர்ச்சி!
Sachin's playing on Kashmir Road

சாலையில் இளைஞர்களோடு இணைந்து கிரிக்கெட்:

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் காரில் அவர் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது சாலையில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து காரை நிறுத்தி, உடனடியாக காரில் இருந்து இறங்கி கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுடன் சச்சினும் இணைந்து சாலையில் விளையாடத் துவங்கினார். இது அங்கிருந்த இளைஞர்கள் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் சச்சின் பேட்டிங் செய்ய, அங்கு விளையாடிய இளைஞர்கள் சிலர் பவுலிங் செய்தனர். அப்பொழுது அவர் பேட்டை திருப்பி பிடித்து கொண்டு பேட்டிங் செய்தது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இறுதியாக சச்சின் அங்கிருந்த இளைஞர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு விடைப்பெற்றார். மேலும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் “கிரிக்கெட்டும், காஷ்மீரும்: சொர்க்கத்தில் நடக்கும் ஆட்டம் என்று பதிவிட்டுள்ளார்” சச்சினின் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com