5.38 கோடிக்கு வீடு வாங்கிய இளம் வீரர் ஜெய்ஸ்வால்.. இரட்டைசதம் கொடுத்த இருமடங்கு வளர்ச்சி!

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal

இந்தியாவின் இளம் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் ரூ5.38 கோடிக்கு வீடு வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டியில் அசுரத்தனமாக விளையாடி வருகிறார். தன் வாழ்நாளில் கிரிக்கெட்டிற்காக கடுமையாக உழைத்த இவருக்கு தன் திறமையைக் காட்ட இப்போதுதான் சரியான நேரம் வந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததோடு, இன்னொரு போட்டியில் அரைசதம் உட்பட மொத்தமாக இந்த தொடரில் மட்டும் 545 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசியுள்ளார். வினோத் காம்ப்ளி மற்றும் விராட் கோலியை அடுத்து இவர்தான் தொடர்ந்து இரு சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் விராட் கோலிக்கு இணையான இங்கிலாந்து மீதான ஆதிக்கத்தை ஜெய்ஸ்வாலே செய்து வருவதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கிரிக்கெட்டில் வளர்ச்சி அடைந்துவரும் ஜெய்ஸ்வால் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துவருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெய்ஸ்வால் அறிமுகமானார். அவரது குடும்பத்தினர்கள் மும்பையில், தானே பகுதியில் அமைந்துள்ள 5 பெட் ரூம்களை கொண்ட பிளாட்டிற்கு குடிப்பெயர்ந்தனர். 6 மாதங்களிலேயே ஜெய்ஸ்வால் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளார்.

மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர வீடு ஒன்றை யஷஸ்வி செய்ஸ்வால் சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த வீட்டை அதானி டியால்டி என்ற கட்டுமான நிறுவனம்தான் கட்டியுள்ளது. இந்த பிளாட்டிற்குள்ளேயே அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.5.38 கோடியாகும்.

இதையும் படியுங்கள்:
Ind vs Eng: நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இரண்டு முன்னணி வீரர்கள் நீக்கம்!
Yashasvi Jaiswal

22 வயதிலேயே ஜெய்ஸ்வால் சொந்தமாக வீடு வாங்கியிருப்பது இளம் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்தார். இப்போது அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. மேலும் அவர் பல விளம்பரங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com